June 04, 2020 Thursday 04.54 AM
Newsletter Home

சற்றுமுன்

எங்களைப் பற்றி

“நேர்மை”. இன்றைய நவீன தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஓர் முக்கிய பங்காற்றும் இணையதள ஊடகம் வாயிலாக உள்ளூர், தேசிய மற்றும் உலகளவில் நிகழும் அனைத்துத் தரப்புச் சமூக நிகழ்வுகளையும் சமூக அக்கறையுடன் புதியபரிணாமத்தில் நேர்மையுடனும் உண்மையுடனும் ஊடகச்சனநாயகக் கருத்துச் சுதந்திரத்திற்குட்பட்டு இயங்கலைச் செய்திகளாக தமிழில் வழங்கும் இணையதள ஊடகம் ஆகும்.

  • நேர்மை இணையதளம் சூலை 15ம் நாள் ‘கர்மவீரர்’ காமராசர் பிறந்தநாளில் ‘நேர்மையாளர்’ திரு. உ.சகாயம் இ.ஆ.ப அவர்களின் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
  • செய்திகளை அவசர கதியில் வழங்காமல் நேர்த்தியாகவும் தெளிவாகவும், சரியாகவும் வழங்குவதே நேர்மை இணையதளத்தின் நோக்கம் ஆகும்.
  • நேர்மை பிரத்யேகக் கட்டுரைகளைப் பொருத்தவரை, அனைத்துத் துறைகள் சார்ந்த பிரபலங்கள், வல்லுனர்கள், தொழிலதிபர்கள், சாதனையாளர்களை நேரடியாக களம் கண்டு, ஆய்வுகள் மேற்கொண்டு நேர்த்தியுடனும் உண்மையுடனும் வெளியிடப்படும்.
  • சிறப்புக் கட்டுரைகளைப் பொருத்தவரை, அனைத்துத் துறை சார்ந்த கட்டுரைகளும் வெளியிடப்படும். அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை, அறிவியல்,பொழுதுபோக்கு என அனைத்துத் துறைகள் சார்ந்த விமர்சனங்கள், அலசல்கள், மதிப்பீடுகள், அறிமுகங்கள், பாராட்டுகள் அந்தந்தத் துறைசார்ந்த விமர்சகர்கள், வல்லுநர்கள், நிபுணர்களிடமிருந்து பெறப்பட்டு வெளியிடப்படும்.
  • வாசகர்கள் எளிதாகச் செய்திகளைப் படிக்கவும் மற்ற சமூகத்தளத்திற்கு(முகநூல்,புலனம், போன்ற..) பகிரவும் தங்களதுக் கருத்துகளைத் தெரிவிக்க ஏதுவானதாகவும் நேர்மை இணையதளம் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.