June 05, 2020 Friday 05.12 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 5 2020 4:35 AM

நகைச்சுவை நடிகர் யோகிபாபு திருமணம் !

Posted Date : Feb 5 2020 4:35 AM

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது.

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாக காமெடியனாக அசத்தி வருபவர் யோகி பாபு. இவரது திருமணம் குறித்த செய்தி சில நாட்களாகவே வந்து கொண்டிருந்தது. இவரும் எனக்கு திருமணம் என்றால் அனைவரிடமும் தெரிவிப்பேன் என்று கூறிவந்தார்.

இந்நிலையில் நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று (05.02.2020) காலை யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் அவர்களது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

இதையடுத்து வரவேற்பு நிகழ்ச்சி வரும் மார்ச் மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை