June 01, 2020 Monday 10.15 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 2 2020 10:07 AM

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் - பாமகவின் வெற்றி இலக்கு 90 இடங்கள் !

Posted Date : Mar 2 2020 10:07 AM

2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், 90 இடங்களில் பாமக வெற்றி பெற வேண்டும் என, அக்கட்சியின் பொதுக்குழு கூட்டதில் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பாமகவின் தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம், சென்னை திருவேற்காட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், காவிரி டெல்டா மாவட்டங்களை, சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.

வரலாற்றுமிக்க இந்த சட்டத்தின் போது, சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு செய்துவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

தொடர்ந்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், 2021-ம் ஆண்டு தேர்தல், கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்கள் இல்லாத தேர்தல் என்றும், அவர்கள் இருந்திருந்தால் பிரசாந் கிஷோரை இறக்குமதி செய்ய தேவையில்லை, என்றும் கூறினார். கட்சியில் உழைப்பவர்களுக்கு வழிவிடுங்கள் என்று கூறிய ராமதாஸ்,  90 தொகுதிகளில் பாமக வெற்றி பெற வேண்டும் என்றார்.  

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை