June 05, 2020 Friday 05.22 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 7 2020 5:57 AM

6,6,6,6,6..! 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள்..! பட்டையை கிளப்பிய தல தோனி..!

Posted Date : Mar 7 2020 5:57 AM

 பயிற்சியின்போது 5 பந்துகளையும் தவறவிடாமல் 5 சிக்சர்களுக்கு விளாசிய முன்னாள் கேப்டன் தோனியின் அதிரடி ஆட்டம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.
ஐபிஎல் போட்டிகள் வரும் 29ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான தீவிர பயிற்சிகளில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒருபகுதியாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்ட சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி, 5 பந்துகளையும் தவறவிடாமல் 5 சிக்சர்களுக்கு விளாசி ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்த வீடியோவை ஐபிஎல் போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்புச் சேனல், தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. உலககோப்பைக்குப்பின் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் ராணுவம், விவசாயம் என இருந்த தோனியின் இந்த அதிரடி ஆட்டத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை