August 04, 2020 Tuesday 07.47 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 10 2020 3:46 AM

ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் அதிபராக 2 பேர் பதவியேற்பு .உள்நாட்டு போர் வெடிக்கும் அபாயம் !

Posted Date : Mar 10 2020 3:46 AM

காபூல்:

ஆப்கானிஸ்தானில், நேற்று இரு தலைவர்கள் அதிபராக பதவியேற்றதால், அந்நாட்டு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.ஆப்கனில், 2019 செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், அஷ்ரப் கனி வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக் கொண்டார். ஆனால், எதிர்த்து போட்டியிட்ட தேசிய கூட்டணி தலைவர், அப்துல்லா அப்துல்லா, தேர்தலில் தில்லுமுல்லு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி, 'தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று ஆப்கன் அதிபர் மாளிகையில், அஷ்ரப் கனி பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதே நேரத்தில், அருகே உள்ள சபேதார் அரண்மனையில், அப்துல்லா அப்துல்லா, ஆப்கன் அதிபராக பதவியேற்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.அஷ்ரப் கனிக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. அதனால், அஷ்ரப் கனி பதவியேற்பு நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவின் அமைதி துாதர், ஜல்மே கலில்சத், ஆப்கனில் உள்ள அமெரிக்க படை தலைவர், ஆஸ்டின் எஸ்.மில்லர், ஐ.நா., பிரதிநிதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சி, அரசு, 'டிவி'யில் நாடு முழுவதும் ஒளிபரப்பானது.

ஆனால், அப்துல்லாவின் பதவியேற்பு நிகழ்ச்சி, 'டோலோ' என்ற தனியார், 'டிவி'யில் மட்டும் ஒளிபரப்பானது. அதனால், அதிபர் பதவிக்கான மோதல், மீண்டும் உள்நாட்டு போருக்கு வழி வகுத்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில், அமெரிக்கா - தலிபான் இடையே, ஆப்கன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, உள்நாட்டு போர் ஓய்ந்து, அங்கு சமூக பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, நார்வேயில், இன்று இரு தரப்பு பேச்சு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆப்கனில், இரு தலைவர்களின் மோதல், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.குண்டு வெடிப்பு ஆப்கனில், இரு வேறு இடங்களில், அஷ்ரப் கனியும், அப்துல்லா அப்துல்லாவும், அதிபராக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியை காண, இரு இடங்களிலும், நுாற்றுக்கணக்கானோர் குவிந்திருந்தனர். அப்போது, திடீரென பயங்கர சத்தத்துடன், இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன.

இதனால், பீதியடைந்த பலர், ஓட்டம் பிடித்தனர். இந்த குண்டு வெடிப்பு குறித்து அஷ்ரப் கனி கூறும்போது, ''நான், குண்டு துளைக்காத உடை அணியவில்லை; இந்நாட்டிற்காக என் உயிரையும் கொடுப்பேன்,'' என்றார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை