June 04, 2020 Thursday 03.38 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Mar 20 2020 4:22 AM

நிர்பயா : குற்றவாளிகள் 4 பேரும் அதிகாலை தூக்கிலிடப்பட்டனர்.தாமதமானாலும், நீதி கிடைத்துள்ளது !

Posted Date : Mar 20 2020 4:22 AM

புதுடில்லி:

நிர்பயா குற்றவாளிகளை தூக்கில் போட்டதற்கு அவர்களது பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.டில்லியில் மருத்துவ மாணவி 'நிர்பயா'வை பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கிய வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும், ஏழு ஆண்டுகளுக்கு பின் இன்று(மார்ச்20) காலை 5.30 மணிக்கு தூக்கில் போடப்பட்டனர். அவர்கள் இறந்துவிட்டதாக டாக்டர்கள் சான்று அளித்துள்ளனர்.

இது தொடர்பாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி கூறியதாவது: 2012 சம்பவம் நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. எங்களுக்கு தாமதமானாலும், நீதி கிடைத்துள்ளது. 7 ஆண்டு போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. நீதித்துறையின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. தூக்கு நிறைவேற்றப்பட்டது, பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கிடைத்த வெற்றி. நிர்பயாவின் தாயார் என்பதில் பெருமை கொள்கிறேன்.

.நிர்பயாவின் தந்தை கூறுகையில், நீதிக்காக போராடியதால் வெற்றி கிடைத்துள்ளது. 2012 சம்பவத்திற்கு பின் நாங்கள் நீதிக்காக போராடினோம். அதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டோம்.

ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இடையே பெற்றோர் வேறுபாடு காட்டக்கூடாது. 4 பேர் தூக்கில் போடப்பட்டது, போலீசார், மீடியாக்களினால் கிடைத்த வெற்றி என தெரிவித்தார்.மக்கள் கொண்டாட்டம் இதனிடையே, நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, திஹார் சிறை வாசல் முன் கூடியிருந்த பொது மக்கள், பெண்கள் அமைப்பினர், இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மா கூறுகையில், நாட்டிற்கு ஒரு உதாரணம் எடுத்து காட்டப்பட்டுள்ளது. இதனை முன் கூட்டியே செய்திருக்க வேண்டும். தற்போது, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது மக்களுக்கு தெரிந்திருக்கும்.தண்டனை தள்ளி போகலாம். ஆனால், நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.

டில்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி மலிவால் கூறுகையில், இது வரலாற்று சிறப்பு மிக்கநாள். நிர்பயாவிற்கு 7 ஆண்டுகளுக்கு பின் நீதி கிடைத்துள்ளது. அவரது ஆன்மா இன்று சாந்தியடையும்.பலாத்கார குற்றவாளிகளுக்கு, தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற வலிமையான செய்தி, இன்று அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில் தண்டனையை நிறைவேற்ற 7 ஆண்டுகள் ஆகியுள்ளது. நிர்பயாவிற்கு நடந்த கொடூரம் போல் மீண்டும் நடைபெறக்கூடாது என உறுதி எடுத்துகொள்வோம். சமீபகாலம் வரை குற்றவாளிகள் சட்டத்தை தவறாக பயன்படுத்த முயன்றனர். நமது அமைப்பில் சிலகுறைபாடுகள் உள்ளன. அதனை சரி செய்ய வேண்டும் என்றார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை