June 01, 2020 Monday 10.36 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன்முத்து
Posted Date : May 16 2020 5:34 AM

கல்லறை செல்ல கலர் கலராய் நுழைவுச்சீட்டு - மீண்டும் திறக்கப்பட்ட மதுபானக் கடைகள் !

Posted Date : May 16 2020 5:34 AM

 உச்சநீதிமன்றம் அளித்த அனுமதியின்பேரில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் மாவட்டம் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் சனிக்கிழமை திறக்கப்பட்டது.

சென்னையைத் தவிா்த்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் கடந்த 7-ஆம் தேதி திறக்கப்பட்டன. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து கடந்த 8-ஆம் தேதி மாலையில் இருந்து டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இரண்டு நாள்களில் மட்டும் ரூ.292 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்தது.

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் வழக்குத் தொடா்ந்தது. இந்த வழக்கில், டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறக்கத் தடையில்லை என உச்சநீதிமன்றம்  தெரிவித்ததைத் தொடா்ந்து, சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட சுமாா் 700 கடைகளைத் தவிா்த்து பிற இடங்கள் அனைத்திலும் டாஸ்மாக் கடைகளும் சனிக்கிழமை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டது.

மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும். கடைக்கு வரும் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபானக் கடைகளிலும் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை