June 01, 2020 Monday 08.45 PM
Newsletter Home

சற்றுமுன்

யுவன்முத்து
Posted Date : May 21 2020 2:44 AM

தொழிலாளர்களை மீட்க பேருந்து வழங்கிய பிரியங்கா - உதவியே காரணம் காட்டி மறுத்த யோகி ! என்ன தான் பிரச்சனை ?

Posted Date : May 21 2020 2:44 AM

உத்தர பிரதேசத்தில் உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அழைத்துச் செல்வதற்கு காங்கிரஸ் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளுக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி மறுத்தது. இதையடுத்து அந்தப் பேருந்துகளை காங்கிரஸ் தில்லிக்கே அனுப்பி வைத்தது.

 

கடந்த 16-ம் தேதி பிரியங்கா தனது ட்விட்டர் பக்கத்தில் மாநில அரசுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறார். கஸிப்பூர் மற்றும் நொய்டா எல்லைகளில் இருந்து தலா 500 பேருந்துகள் என 1,000 பேருந்துகளைத் தொழிலாளர்களுக்காக அனுமதிக்க வேண்டும். அதன் செலவை காங்கிரஸ் கட்சியே ஏற்கும் எனப் பதிவிட்டார்.

இந்த நிலையில், காங்கிரஸ் அளித்த பேருந்துகளின் பட்டியலில் இருக்கும் பல்வேறு பதிவு எண்கள், இருசக்கர வாகனம், கார் மற்றும் மூன்று சக்கர வானங்களின் பதிவு எண் என்று குற்றம்சாட்டியது உ.பி அரசு. மேலும், பல பேருந்துகளின் பதிவு காலம் முடிந்துவிட்டது எனவும் குற்றம் சாட்டியது. எனினும், காங்கிரஸ் இந்தக் குற்றசாட்டை மறுத்தது.

உத்தரப்பிரதேச அரசு, காங்கிரஸ் அளித்த 1,000 பேருந்துகளின் பட்டியலில் 79 பேருந்துகள் காலம் கடந்தது எனவும், 140 பேருந்துகளுக்கு இன்ஷூரனஸ் இல்லை எனவும் இதில் 78 பேருந்துகளில் இவை இரண்டும் இல்லை எனவும் பட்டியல் வெளியிட்டது. இந்த நிலையில் இன்று வீடியோ மூலம் பேசிய பிரியங்கா காந்தி,

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா புதன்கிழமை வெளியிட்ட காணொலியில், ''இத்தகைய இக்கட்டான சூழலில் மாநில அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் முதுகெலும்பாக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் உள்ளனா். அவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டியது அனைவரின் பொறுப்பாகும். இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.

 

புதன்கிழமை மாலை 4 மணியுடன் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு 24 மணிநேரம் ஆகிவிடும். எனவே, பேருந்துகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்குங்கள். பேருந்துகளில் பாஜக கொடிகளையும், கட்சிச் சின்னங்களையும் கூட பயன்படுத்திக் கொள்ளுங்கள். பேருந்துகளை பாஜக தான் ஏற்பாடு செய்தது என்று கூட கூறிக் கொள்ளுங்கள். ஆனால், பேருந்துகளை இயக்க அனுமதியுங்கள்'' என்று கோரியிருந்தாா்.

எனினும், மாநில அரசு எந்த அனுமதியும் வழங்காததையடுத்து பேருந்துகள் அனைத்தும் தில்லிக்கே அனுப்பி வைக்கப்பட்டன.

 

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை