July 13, 2020 Monday 07.01 AM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Jun 3 2020 1:10 PM

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் : மக்கள் பாதையின் முயற்சியால் 15 ம் தேதி தமிழகம் வருகை !

Posted Date : Jun 3 2020 1:10 PM

 குடும்பத்தின் வறுமையை சமாளிக்க தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி, சென்னை, கடலூர், திண்டுக்கல், திருநெல்வேலி, விழுப்புரம், திருச்செந்தூர், இராமநாதபுரம், தூத்துக்குடி,  நாகப்பட்டினம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 756  மீனவர்கள் மீன்பிடிக்ககும் வேலைக்காக ஈரான் நாட்டிற்கு சென்றிருந்தனர். 

கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஈரான் நாட்டில் சிக்கிய தமிழக மீனவர்கள் தமிழகத்திற்கு வரமுடியாமல், உணவிற்கும் வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் ஈரானில் சிக்கித்தவித்த தமிழக மீனவர்களின் கூக்குரல்  மக்கள் பாதையின் வழிகாட்டி  திரு. உ. சகாயம் அவர்களது கவனத்திற்கு வந்தது. அவர்களின் ஆலோசனையின் பேரில் மக்கள் பாதையின் தலைமைக்குழு நடவடிக்கைகளை எடுக்க துவங்கியது.

முதல் கட்டமாக கடந்த மே மாதம் 18/05/2020 அன்று மக்கள் பாதையின் தலைமைக் குழு சென்னை தலைமைச் செயலகத்திற்கு சென்றது. 756  தமிழக மீனவர்களையும் தமிழகம் அழைத்து வருவதற்கான முழுப் பயணச் செலவுகளையும்  மக்கள் பாதையே ஏற்கும். தமிழக அரசு இதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

 மேலும் இந்த கோரிக்கையினை வலியுறுத்தி தலைமைச் செயலாளர் திரு. சண்முகம் இ.ஆ.ப, அரசு கூடுதல் செயலாளர் டாக்டர். அதுல்யமிஸ்ரா இ.ஆ.ப, அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார் இ.ஆ.ப, முதலமைச்சரின் தனிப் பிரிவு செயலாளர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை தமிழக அரசின் சார்பில் அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாக  உறுதி அளித்தார்கள்.

 மக்கள் பாதையின் சார்பில் தினமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ஈரான் மீனவர்கள் எப்போது தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கேட்கப்பட்டது. ஈரானின் சிக்கித்தவிக்கும் மீனவர்களை தமிழகத்திற்கு விரைவில் அழைத்து வரவில்லை என்றால், மக்கள் பாதை பேரியக்கம் போராட்ட களத்தில் குதிக்கும் என்றும் தமிழக அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. 

 கடந்த  (01/06/2020)  அன்று  ஈரானின் உள்ள தமிழக மீனவர்களை தமிழகத்திற்கு அழைத்து வரும் பொறுப்பில் உள்ள தமிழக அரசின் துணைச் செயலாளர் (பொது சட்டம் (ம) ஒழுங்கு, வரவு-செலவுத்துறை) திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்களை மக்கள் பாதையே சார்ந்தோர் சந்தித்தார்கள் . அப்போது அவர் "மக்கள் பாதை பேரியக்கத்தின் சார்பில் தொடர்ந்து கொடுத்த கோரிக்கையினை ஏற்று, ஈரானில் உள்ள 756  தமிழக மீனவர்கள் அனைவரையும்...இந்திய கப்பல் படைக்கு சொந்தமான கப்பலில் வரும் 15/06/2020 அன்று தமிழகத்திற்கு அழைத்துவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது" என்று கூறினார்.

 

Comments Here

  • manithan Jun 09,2020 | 06:57 AM

    ஈரான் நாட்டிற்கு மீன்பிடித் தொழில் செய்வதற்காக சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 650 மீனவர்கள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்றுமாத காலமாக உணவு, குடிநீர், உறைவிடம் இன்றி சிக்கித்தவித்து வருகின்றனர். இவர்களு