August 04, 2020 Tuesday 07.23 AM
Newsletter Home

சற்றுமுன்

யுவன் முத்து
Posted Date : Jun 27 2020 6:25 AM

பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு !

Posted Date : Jun 27 2020 6:25 AM

தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

“பாரத் நெட்” திட்டம் தமிழ்நாட்டில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளை கண்ணாடி இழை மூலம் இணைக்கும்  உட்கட்டமைப்பு திட்டமாகும். இத்திட்டம் மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் தமிழ்நாட்டில் செயல் படுத்தப்படும் ஒரு தகவல் தொழில் நுட்பத் திட்டமாகும்.

கிராமங்களில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு தரும் விதமாக பாரத்நெட் திட்டத்துக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது. இதன்படி 1950 கோடி ரூபாயில் 12524 கிராம ஊராட்சிகளை ஃபைபர் கேபிள் மூலம் இணைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த பாரத் நெட் டெண்டரில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம், திமுக குற்றம் சாட்டி இருந்தன. நீதிமன்றம் வரை இந்த விவகாரம் சென்றது.

இந்நிலையில், டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை எனக் கூறி, தமிழகத்தில் பாரத் நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து மத்திய வர்த்தக அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் குறைகளை களைந்து மீண்டும் டெண்டர் விட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

 

Comments Here

  • Manithan Jul 06,2020 | 08:04 AM

    சூலை 5 : #பீகாரில் பெற்ற தகப்பனை 1500 கிமீ சைக்கிள் மிதித்தே #கொரோனா ஊரடங்கால் அழைத்துவந்த 15 வயது சிறுமி -#பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறாள்! ! இது என்ன நாடா -இல்லை சுடுகாடா? ?

  • ?.????????? Jul 01,2020 | 04:54 PM

    மக்கள் பாதையில் பயணிக்க விரும்பும் க.ரெங்கராஜ் அரசு கண் மருத்துவ உதவியாளர் ஆரம்ப சுகாதார நிலையம் மெலட்டூர் தஞ்சாவூர் மாவட்டம். 9787558119