August 11, 2020 Tuesday 02.50 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 10 2018 12:02 PM

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் - 1986

Posted Date : Nov 10 2018 12:02 PM

1) நுகர்வோர், நுகர்வோர் என்று சொல்லப்படுகின்றதே நுகர்வோர் என்பவர் யார்?
 
           பயணீட்டாளர் உபயோகப்பவர், பயன்படுத்துபவர், பெறுபவர், துய்ப்பவர், வாங்குபவர் ஆகியோரே நுகர்வோர்.
 
2) நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் பார்வையில் நுகர்வோர் என்பவர் யார்?
 
      ஒரு பொருளை விலைக்கொடுத்து வாங்கி தனது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவர். ( உதாரணம் : உணவுப் பொருட்கள், மின் சாதனப் பொருட்கள், காய்கறிகள், துணிமணிகள், மருந்து பொருட்கள் போன்ற பொருட்கள் விற்பனைச் சட்டத்தில் ( Sale of Goods Act பட்டியலிட்ட அனைத்தும்)
சேவையை விலை கொடுத்து அனுபவிப்பவர். ( உதாரணம் : போக்குவரத்து, விமான சேவை, வங்கிகள், தபால் துறை, அரசு மற்றும் தனியார் மருத்துவ சேவை, திரையரங்கு, கூரியர், கல்வி நிறுவனங்கள், ரயில்வே போன்ற துறைகள் மூலம் வழங்கப்படும் சேவைகள் )
 
               தவனைமுறையில் பணம் செலுத்தி பொருட்களை பெறுபவரும் நுகர்வோர். (உதாரணம் : EMI மூலமாக பணம் செலுத்தி பெறப்படும் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் மின்சாதன பொருட்கள் போன்றவை)
 
              பொருளுக்காக பணம் தருவதாக உத்தரவாதம் அளித்து பெற்றுச் செல்பவரும் நுகர்வோர்.
             பொருள் அல்லது சேவையினை விலைக் கொடுத்து பெற்றவரின் அனுமதியின் பெயரில் பொருளையோ அல்லது சேவையையோ பயன்படுத்தும் நுகர்வோர். உதாரணம் : வீட்டில் கேஸ் இணைப்பு கணவர் பெயரில் இருக்கும். அதனை மனைவி பயன்படுத்தினால் அவரும் நுகர்வோரே, அதே போல் இரு சக்கர இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் தகப்பனார்  விலை கொடுத்து  வாங்கியிருந்து அதனை அவரது அனுமதியின் பேரில் மகன் பயன்படுத்தினால் அவரும் நுகரோரே. (Sec.2(1)(d))
 
3) பொருட்களின் குறைபாடு,  இதற்கு மட்டும்தான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறலாம்.
 
               பொருட்களின் குறைபாடு, சேவையில் குறைபாடு மட்டுமின்றி நேர்மையற்ற வணிக நடைமுறைகள் (Unfair Trade Practices) தடுப்பூட்டும் வணிக நடவடிக்கைகள் ( Restrictive Tradec Practices) ஆகியவற்றுக்கும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நிவாரணம் பெறலாம்.

4) நுகர்வோர் பாதுகாப்பிச் சட்டத்தின் கீழ் நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள் என்றால் என்ன?
 
  1) வாய்மொழியாகவோ, எழுத்து, படங்கள் வாயிலாகவோ சைகைகள், விளம்பமரகள் வழியாக விற்கும் பொருளில் இல்லாத அல்லது குறிப்பிட்ட அளவிற்கு இல்லாத தரம், குணம், பகுப்பு உள்ளடக்கம், மாதிரி ஆகியவை இருப்பதாக பொய்யான தகவல் கொடுத்தல். (உதாரணம் : அக்மார்க், ஐ.எஸ்.ஐ தரம் முத்திரை பெறாமலே பெற்றதாக போட்டுக் கொள்வது)
 
 ( 2 ) ஒரு சேவைக்கு விற்க வேண்டிய தரம், குணம், உள்ளடக்கம் போன்றவை அங்கீகரிக்கப்பட்டவாறு இல்லாமல் அவை இருப்பதாக கூறுவது. உதாரணம் : குளிர் சாதன திரையரங்கு).
 
( 3 )   உபயோகித்த பழைய பொருட்களை புதுப்பித்து புதிய பொருட்கள் போல் காட்டி புதிய பொருட்களுக்குரிய விலையில் விற்பது. உதாரணம்: பழைய தொலைக்காட்சியா ? பழைய வாஷிங் மிஷினா? தூக்கி எறியுங்கள் என்று விளம்பரப்படுத்தி அத்தனை பெற்று  அதில் உள்ள சில பொருட்களை மாற்றி மீண்டும் புதியது போல் விற்பனை செய்வது.
 
(4 )ஒரு நிறுவனம் தனது தயாரிப்பி பொருளுக்கு புகழ் பெற்ற ஒரு அயல் நாட்டு நிறுவனத்தின் ஆதரவு, அமைதி , ஒத்துழைப்பு, தரம், குணம், தன்மை இருப்பதாக உண்மைக்கு புறம்பாக கூறல்
 
(5 )  ஒரு விற்பனையாளரோ, ஒரு விநியோகஸ்தரோ  வேறு  ஒரு பெயர்பெற்ற நிறுவனத்துடன் இல்லாத உறவு, இணைப்பு, அனுமதி, அங்கீகாரம்  ஆகியவை இருப்பதாக தெரிவித்தல்.
 
(6 ) ஒரு பொருளின் அல்லது சேவையின் அவசியம், உபயோகம், தேவை பற்றிய தவறான தகவல்களை நம்பும்படியாக  செய்வது.
( உதாரணம் : ஒரு சிமெண்ட் கம்பெனி தனது சிமெண்ட்டிற்கு எகின் வலிமை இருப்பதாக பயன்படுத்திக் கொள்வது)
 
(7 ) போதுமான சோதனைகள் இல்லாமல் ஒரு பொருளில் உழைப்பு திறன்,நம்பகம் உள்ளதாக உறுதி அளித்தல். ( உதாரணம் : ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100  கிலோமீட்டர் செல்லும் என்று இரு சக்கர வாகனத்தை விற்பனை செய்தல்) 
 
(8 ) பொருட்களுக்கும், சேவைகளுக்கும் போலியான, பொய்யான, மிகைப்படுத்தப்பட்ட உத்திரவாத சான்று அளித்தல்.
 
(9 ) ஒரு பொருளை விற்பனை செய்யும் பொழுதோ, சேவையை அளிக்கும் பொழுதோ இது என்னிடம் மட்டும் தான் இந்த விலைக்கு கிடைக்கும், வேறு எங்கும் இதே விலைக்கு வாங்க முடியாது என்றும் அடுத்த வியாபாரி வழங்கும் சேவையை பற்றி தவறான செய்திகளை பரப்புவது.
 
(10 )  தள்ளுபடி என்ற பெயரில் பழைய சரக்குகளை விளைக்கூட்டி எழுதி அதிலிருந்து தள்ளுபடி செய்ததாக கூறி விற்பனை செய்தல்.
 
(11 ) கொடுக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலே அன்பளிப்பு, பரிசு பொருட்களை தருவதாக அறிவித்தல்.
 
(12 ) உண்மையில் ஒரு பொருளின் விலையுடன் மற்றொரு பொருளின் விலையை மறைமுகமாக கூட்டி ஒரு பொருள் வாங்கினால் இன்னொரு பொருள் இலவசம் என்று விற்பனை செய்தல்.
 
(13 ) ஒரு பொருளின் விற்பனையையோ, உபயோகத்தையோ, இலாபத்தையோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதிகரிக்கும் நோக்கத்துடன் போட்டிகள், குழுக்கள், பரிசு திட்டங்கள், அறிவு திறன், அதிர்ஷ்ட்ட போட்டிகள் நடத்துவது.
 
(14 ) சட்டப்படியோவழக்கப்படியோ ஒரு பொருள் அல்லது சேவையை தர மறுத்தல் அல்லது அளித்தல். ( உதாரணம் : பெட்ரோல் விலை அடுத்த நாள் உயரும் என்று தெரிந்து கொண்டு இருப்பு வைத்துக் கொண்டு இல்லையென்று சொல்லுதல்.) (Sec.2(1 ) )
 
5 )  தடுப்பூட்டும் வணிக நடவடிக்கை ( Restrictive Trace  Practice )என்றால் என்ன? 
 
  ஒரு நுகர்வோர் தமக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றால் அந்த பொருளை தர மறுத்து அதனுடன் விற்பனையாகாத வேறு பொருட்களை வாங்க சொல்லி கட்டாயப்படுத்துவது. ( உதாரணம் : கேஸ் இணைப்பு கேட்டு சென்றால் அடுப்பை வாங்க சொல்வது. நியாய விலைக்கடையில் சர்க்கரை வாங்க சென்றால் சோப்பு கட்டி போன்ற இதர பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவது.)
 கால தாமதத்தினால் ஏற்பட்ட விலையேற்றம் ஒரு நுகர்வோரை கட்டுப்படுத்தாது. அவ்விலையேற்றத்தை செலுத்த கோரினால் அதுவும் தடுப்பூட்டும் வணிக நடவடிக்கையே. ( உதாரணம் : கட்டிட பொறியாளர்  ஒப்பந்தத்தின்படி வீட்டை கட்டி தராமல் காலதாமதப்படுத்தி அதனால் கட்டுமானப் பொருட்களுக்கு ஏற்படும் விலையேற்றம் நுகர்வோர் பொறுப்பாக மாட்டார். ) (Sec.2 (1 ) (nnn ))  
 
6 ) பாதிக்கப்பட்ட நுகர்வோர் எங்கு சென்று நிவாரணம் பெறுவது?
 
                    பொருட்கள் / சேவை  குறைபாடு மற்றும் நேர்மையற்ற / தடுப்பூட்டும் வணிக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர் அவரது பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப மாவட்ட / மாநில / தேசிய அளவில் அமைக்கப்பட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற/ ஆணையத்தில் புகார் செய்து நிவாரணம் பெறலாம்.
 
7 ) மாவட்ட/ மாநில/ தேசிய நுகர்வோர் குறைதீர் மன்றம்/ ஆணையத்தின் முன்பாக மனு தாக்கல் செய்ய ஏதேனும் வரையறை உள்ளதா ?
 
                       உள்ளது. ரூ.20 லட்சம் வரை உள்ள பிரச்சனைகளுக்கு மாவட்ட குறைதீர் மன்றத்திலும், ரூ.20 லட்சத்திற்கு மேல் ஒரு கோடி வரை உள்ள நுகர்வோர் பிரச்சனைகளுக்கு மாநில குறைதீர் ஆணையத்திலும், ஒரு கொடியும் மேல் உள்ள நுகர்வோர் பிரச்சனைகளுக்கு தேசிய நுகர்வோர்  குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்யது நிவாரணம் பெறலாம்.
 
8 )  நுகர்வோர் குறைதீர் மன்றம் / ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்ய கட்டணம் ஏதேனும் உள்ளதா?
              
                    ரூ.5 லட்சம் வரை உள்ள நுகர்வோர் பிரச்சனைகளுக்கு எவ்வித கட்டணமும் இல்லை. ரூ.5  லட்சம் முதல் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை உள்ள நுகர்வோர் பிரச்சனைகளுக்கு ரூ.400 - ௦௦ கட்டணம் செலுத்த வேண்டும். அதனை அஞ்சல் ஆணை (Postal Order) மூலம் மனுவுடன் சேர்த்து  தாக்கல் செய்யலாம்.
 
9 ) பாதிக்கப்பட்ட நுகர்வோர் மனு தாக்கல் செய்ய ஏதேனும் காலவரம்பு உள்ளதா ?
 
                       உள்ளது. பாதிக்கப்பட்ட நுகர்வோர் இரண்டு வருட காலத்திற்குள் அவரது பாதிப்பிற்கு ஏற்ப மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம்/ ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை ஏதேனும் கால தாமதம் ஏற்படுமாயின் பிரிவு 24 (A)ன் கீழ் அசல் மனுவுடன் கூடுதலாக கால தாமதத்திற்கான காரணத்துடன் மனு தாக்கல் செய்ய வேண்டும்.  
10 ) மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு என்ன?
                          
                               பாதிக்கப்பட்ட நுகர்வோர் நிவாரணம் பெறுவதற்காக அனைத்து மாவட்டங்களில் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை நுகர்வோர் நீதிமன்றம் என்று அழைக்க கூடாது. மாவட்ட அளவிலான நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட நீதிபதி அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் தலைவராகவும், ஒரு ஆன் மற்றும் பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள்.
 
11 ) மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு என்ன ?
 
                              மாநில அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஓய்வு உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் தலைவராகவும் , ஒரு ஆன் மற்றும் பெண் உறுப்பினர்கள் இருப்பார்கள்.
 
12 ) தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடு என்ன?
 
                           தேசிய அளவிலான நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது உச்சநீதிமன்ற நீதிபதி அந்தஸ்த்தில் உள்ள ஒருவர் தலைவராகவும், ஒரு ஆன் மற்றும் பெண் உட்பட 5  உறுப்பினர்கள் இருப்பார்கள்.
 
13 ) நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தில் உள்ள சிறப்பம்சம் என்ன ?
 
          (1) 90 நாட்களுக்கு மனுவை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.
 
          (2) தபாலில் கூட வழக்கைபதிவு செய்யலாம். 
 
          (3) பாதிக்கப்பட்ட நுகர்வோரே மனுதாக்கல் செய்து வாதிடலாம். வழக்கறிஞர் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
 
           (4 )  பாதிக்கப்பட்ட நுகர்வோர் சார்பில் பதிவு செய்யப்பட்ட நுகர்வோர் சங்க பிரதிநிதி வாதிடலாம்.
 
14 ) மேல்முறையீட்டிற்கான நடைமுறை என்ன?
 
                    சம்மந்தப்பட்ட நுகர்வோர் குறைதீர் மன்ற/ ஆணைய தீர்ப்புக்கு எதிராக மேல்மட்ட அமைப்பிற்கு 30 நாட்களுக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும். தேசிய ஆணையத்தின் தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் முறையிடலாம்.
                              
 
                                 
 

Comments Here

  • Moorthy Feb 06,2020 | 04:57 PM

    Very nice