August 11, 2020 Tuesday 03.35 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Nov 27 2018 8:48 AM

மின்கம்பங்களை விமானம் மூலம் நட வேண்டும் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

Posted Date : Nov 27 2018 8:48 AM

 கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழிற்நுட்பம் மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

புயலால் முற்றிலும் உருக்குலைந்து போன நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் மின்சாரம் வினியோகிப்பதற்காக மின் கம்பங்கள் நடும் பணி நேற்று நடந்தது. இந்த பணிகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

இதன்பின்னர் வேதாரண்யத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர்கள், மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நவீன தொழிற்நுட்பம் மூலம் மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

அமைச்சரின் இந்த பேச்சை கேட்டு மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இதை புரிந்து கொண்ட கூட்டத்தில் இருந்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அது சாத்தியமில்லை. இப்படி செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்று கூறினார்.

அப்போது மீண்டும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது, "வெளிநாட்டில் நடுக்கடலில் பாலம் கட்டுகிறான். கடலுக்கு அடியில் நகரத்தையே நிர்மாணிக்கிறான். நம்மால் விமானம் மூலம் மின்கம்பங்களை நட முடியாதா? என்ன என்று கேட்டார். இப்படி செய்தால் விவசாயம் அழிந்து விடும் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவிக்கிறார். விவசாயம் அழிந்தாலும் பரவாயில்லை. மின்கம்பங்களை விமானம் மூலம் நடுவதற்கான கண்டுபிடிப்புகளை மின்வாரிய அதிகாரிகள் கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அடிக்கடி சர்ச்சையாக பேசுவது வழக்கம். மீண்டும் இதேபோல் பேசியதால் மின்வாரிய அதிகாரிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போயினர்.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை