May 30, 2020 Saturday 02.13 AM
Newsletter Home

சற்றுமுன்

இரா.கதிர்மதி
Posted Date : Dec 11 2018 6:30 AM

மொழிப் பெயர்த்த மௌனங்கள்

Posted Date : Dec 11 2018 6:30 AM

என்னைக் கவர்ந்த தாய்மொழியே...

மனவீணையை நித்தமும்
மீட்டினாய்...
தமிழ்மொழியை யுத்தமும்
ஊட்டினாய்...


மொழியாய் உதிர்த்த
நட்சத்திர நிலவே...
நீயில்லை யென்றால்
இரவும் பகலே...


அந்நிய நாடில்லை
மொழி நமதே...
அத்துனை சுவையின்
இலக்கியம் உமதே...


பாற்கடல் தாண்டி
பசித் தீர்த்தாய்...
ஞானம் நிறையக்
காப்பியம் தந்தாய்...


எண்ணங்களை எழுச்சியுள்
புகுத்தும் நற்றமிழே...


உயிர் மூச்சில்
தமிழ்முடிச்சாய் விழுந்த
கன்னித்தமிழே...


கடல்கடந்து
காவியமொழியைப்
பறைசாற்றிய வண்டமிழே...
அன்னிய நாடல்ல இது
அன்னைநாடு என்றுணர...


இலக்கணத்துள்
ஆழப்பதிந்தாய்
இலக்கியமாய்
ஆர்ப்பரித்தாய்...
தமிழ்சிந்தையாய் கவிச்சந்தம்
பதித்தாய்...
தமிழ் நளினத்தின் சுவையுள்
மிகுந்தாய்...
தமிழ்த் துடிப்பில்லா
தமிழர்களே இதை
தமிழ்நாடு என்று
உணருங்களேன்...
பின்... தமிழால் நாடு என்று
உணர்த்துங்களேன்...

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை