November 12, 2019 Tuesday 04.38 AM
Newsletter Home

சற்றுமுன்

மாயோன்
Posted Date : Sep 18 2018 9:03 PM

கிராமத்து வாசம்

Posted Date : Sep 18 2018 9:03 PM

பச்சை பசேலென்ற வயல்வெளிகள்

பளபளக்கும் நிலவொளிகள்

கூட்டம் கூட்டமாய் பறவைகள்

ஓட்டம் ஓடும் அருவிகள்

ஆட்டம் ஆடும் விலங்குகள்

அதை நோட்டம் போடும் மனிதர்கள்

 

அம்மாச்சியின் ஆழாக்கு கூழ்

ஆற்று மீனின் அறுசுவை உணவு

அருகில் இருக்கும் குளத்தில் 

ஆனந்த குளியல்

 

அமைதியான  பூந்தோட்டம்

ஆரவாரமான தேரோட்டம்

விழாக்களிலோ பலகாரம்

அதனால் விலங்குகளுக்கோ அலங்காரம்

கிளிகளோ கொஞ்சும்

பழக வா என கெஞ்சும்

விளையாட்டின் இருப்பிடம்

வீரத்தின் பிறப்பிடம்

 

அண்டை வீட்டு பாசம்

அடுத்த நாடு வரை பேசும்

கெண்டை மீனு குழம்பு வாசம்

அடுத்த தெரு வரை வீசும்..

 

குளக்கரை பாசை

வீரமான மீசை

கோயில்மணி ஓசை

என் கிராமத்திற்கென தனி பாஷை..

 

அறிவுக் கதைகள்

ஆசை உதைகள்

சின்ன சின்ன விதைகள்

இது என்றும் கலையாது கிராமத்து நினைவுகள்....

 

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை