December 03, 2021 Friday 10.23 PM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Dec 27 2018 7:02 AM

இந்தியன் ரயில்வேயில் 14033 பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 2 முதல் விண்ணப்பம் - ரயில்வே தேர்வு வாரியம் 

Posted Date : Dec 27 2018 7:02 AM

இந்தியன் ரயில்வேயில் 14033 பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 2 முதல் விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியன் ரயில்வேயில் 13034 இளநிலை பொறியாளர்கள், 48 இளநிலை தொழில்நுட்ப பொறியாளர்கள், 456 உதிரிபாகங்கள் டிப்போ மேலாளர் உள்ளிட்ட 14033 காலி பணியிடங்கள் உள்ளன. 

காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் ஆன்லைன் மூலம் வரும் ஜனவரி 2 ஆம் தேதியில் இருந்து 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

18 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்ட டிப்ளமோ, இளநிலை பொறியியல் (BE), முதுநிலை பொறியியல்(ME) உள்ளிட்ட படிப்புகளில் குறைந்தபட்சம் 45 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்கள் ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை