#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
இலங்கையில் நடந்த விழாவிற்கு சென்ற தமிழ் இயக்குனரை தாக்கிய சிங்கள ராணுவம்.
பி.இ.படித்தவர்கள் பள்ளிகளில் கணித ஆசிரியர் ஆகலாம் தமிழக அரசு அறிவிப்பு
முல்லை பெரியாறு அணை கண்காணிப்பு;மழைகால பராமரிப்பு !!
Balance & Signal இல்லாமல் இனி கால் பண்ண முடியும் - Airtel-ன் புதிய திட்டம்!
நெகிழி குப்பைகளால் படிப்படியாக அழியும் கடல் உயிரினங்கள் ;பிளாஸ்டிக் மாசுபாட்டால் கோரம்
நெகிழி பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்தவேண்டும்!!! தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
நியூஸிலாந்தில் வெடித்து சிதறிய எரிமலை 5 பேர் பலி
திருவண்ணாமலையில் இன்று தீப விழா!
ஊராட்சி தலைவர் பதவி 25 லட்ச ரூபாய்க்கு ஏலம்?
எகிப்து நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் கிலோ ரூ.110
பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த 28 ஆயிரத்து 167 மாணவர்களுக்கு மாற்றுச் சான்று (டிசி) கொடுக்கப்பட்ட நிலையில் கட்டாய ‘டிசி’ கொடுக்கப்பட்ட மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தவறிழைத்த பள்ளிகளுக்கு தேர்வுத்துறை இயக்குநர் எச்சரித்துள்ளார்.
பள்ளிக் கல்வித்துறையில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வுத்துறையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த 2017ம் ஆண்டு தேர்வுத்துறை ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. அதில், பிளஸ் 1 வகுப்பு மாணவர்களும் பொதுத் தேர்வு எழுத வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், பிளஸ் 1 வகுப்பு தேர்வில் சில பாடங்களில் மாணவர்கள் தோல்வி அடைந்தால், அவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்வது தடைபடாது. ஆனால், பிளஸ் 1ல் தோல்வி அடைந்த பாடங்களை ஜூன் மாதத்தில் நடக்கும் உடனடிதேர்வின்போதோ அல்லது பிளஸ் 2 தேர்வின்போதோ எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதன்படி, கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு விடைத்தாள் திருத்திய பிறகு பார்த்தால், தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் வீதம் மிகவும் குறைவாக இருந்தது தெரியவந்தது. அதனால், இந்த மதிப்பெண்கள் உயர் கல்விக்கு செல்லும் போது கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும், பிளஸ் 2 மதிப்பெண் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அத்துடன் மொத்த மதிப்பெண்கள் என்பது 1200ல் இருந்து 600 ஆகவும் குறைக்கப்பட்டது. மேற்கண்ட மேனிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் மாதம் தொடங்க உள்ளது. அதற்காக மாணவர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணியில் தேர்வுத்துறை ஈடுபட்டு வருகிறது.
அரசுப்பள்ளிகள், தனியார் பள்ளிகள் மூலம் மாணவர்கள் பெயர்கள் பெறப்படுகிறது. இந்த விவரங்கள் தேர்வுத்துறைக்கு வந்தபோது, பிளஸ் 1 தேர்வை 28 ஆயிரம் மாணவர்கள் எழுதாமல் தவிர்த்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில் 8 லட்சம் பேர் படித்துள்ள நிலையில் 28 ஆயிரம் பேர் தேர்வு எழுதாமல் விட்டது தேர்வுத்துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தரா தேவி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த மார்ச் மாதம் பிளஸ்1 வகுப்பு மாணவர்கள் குறித்து தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலை அடிப்படையாகவும், இந்த ஆண்டு நடக்க உள்ள பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியலையும் ஒப்பிட்டுப் பார்த்ததில், பிளஸ் 1 தேர்வுக்கு பிறகு பிளஸ் 2 வகுப்பில் சேராமல் மாற்றுச் சான்று பெற்றுச் சென்ற மாணவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 167 என்று தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணை 100ன்படி, பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம் என்றும், பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை ஜூன் மாதத்தில் நடக்கும் உடனடி சிறப்பு தேர்விலோ அல்லது பிளஸ் 2 தேர்வின்போதோ, அல்லது இரண்டிலுமோ பின்னடைவுப் பாடமாக, கல்லூரிகளில் உள்ளது போல எழுதிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அரசாணையின்படி பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களை பிளஸ் 2 வகுப்பில் சேர்க்காமல், மாற்றுச் சான்று வழங்கி பள்ளியை விட்டு நீக்கியுள்ளது.
எனவே, மாற்றுச்சான்று பெற்று சென்ற மாணவர்களை பிளஸ்1 மாணவர்களாக கருதி தேர்வுப் பட்டியலில் சேர்த்து 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ள தேர்வுகளை எழுதவும், பிளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்த பாடங்களை எழுதவும், செய்முறைத் தேர்வுகளை எழுதவும் அனுமதி வழங்கப்படுகிறது. அதனால், இந்த தகவல்களை, மாற்றுச்சான்று பெற்று சென்ற மாணவர்களுக்கு ஜனவரி 5ம் தேதிக்குள் அந்தந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை