May 24, 2019 Friday 07.10 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 9 2019 5:05 PM

திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை; ரூ.10 லட்சம் அபராதம் - வருகிறது புதிய சட்டம் 

Posted Date : Jan 9 2019 5:05 PM

திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய சினிமாவை பொறுத்த வரை குறிப்பாக தமிழ் சினிமா உலகில் பெரும் பிரச்சனையாக இருப்பது திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடுவது. பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டும் இதை தடுக்க முடியவில்லை.

தொடர்ந்து புதிய படங்கள் வெளியான முதல் நாளே இணையதளங்களிலும் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. பட தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

இதை தடுக்க திரைப்பட சட்டம்-1952-ன் 7-வது பிரிவு, அபராதம் விதிக்க வகை செய்கிறது. இந்நிலையில், தண்டனையை கடுமையாக்குவதற்காக, இச்சட்டத்தில் புதிய உட்பிரிவை சேர்க்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், திரைப்பட சட்ட திருத்த வரைவு மசோதாவை உருவாக்கி உள்ளது.

இதன்படி, எழுத்து மூலமான அனுமதியின்றி திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டால், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ரூ.10 லட்சம் வரை அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ விதிக்கப்படும். இந்த வரைவு மசோதா குறித்து 14-ந் தேதிக்குள் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை