February 24, 2019 Sunday 10.24 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 10 2019 8:54 PM

தமிழ் ராக்கர்ஸில் வெளியானது பேட்ட திரைப்படம் - படக்குழு அதிர்ச்சி

Posted Date : Jan 10 2019 8:54 PM

 ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படமும், ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு இன்று வெளியானது. தமிழ் திரையுலகில் இருவரும் உச்ச நட்சத்திரங்கள் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இரு படங்களுக்கும் பெரும் வரவேற்பு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக புதிய திரைப்படங்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. குறிப்பாக தமிழ் திரைப்படங்கள் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் படம் வெளியாகும் முதல் நாளே வெளியிடப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

இந்நிலையில் ரஜினி நடித்து இன்று வெளியான பேட்ட திரைப்படம் இன்று மாலையே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் தொடர்ந்து முடக்கப்பட்டாலும் வெவ்வேறு முகவரிகளில் படத்தை வெளியிடுகின்றனர்.

முதல் நாளே பேட்ட திரைப்படம்  இணையதளத்தில் வெளியாகியுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழ் ராக்கர்ஸ் தமிழ் சினிமா உலகிற்கு பெரும் தலைவலியாகவே உள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments