September 20, 2019 Friday 08.43 AM
Newsletter Home

சற்றுமுன்

உலகம் கேள்விப்படாத விடயங்களைச் சொன்ன ஐன்ஸ்டீன்; ஆராய்ச்சிக்கு உள்ளான ஐன்ஸ்டீனின் மூளை: வியத்தகு தகவல்கள் 

Posted Date : Sep 18 2018 5:22 PM

பொதுவாக நம் பள்ளி காலங்களில் அறிவியல் ஆசிரியர் நம்மை திட்டும்போது "உனக்கு மூளை இருக்கா? என்று கேட்பார்கள் அதோடு  " இவருக்கு ஐன்ஸ்டீன் மூளை அதான் அதீத அறிவு " என்று நகைப்பாக சொல்வதும் உண்டு ...

அப்படி ஐன்ஸ்டீனின் மூளை என்ன சிறப்பம்சம்  கொண்டது? பொதுவாக அறிவியல் விஞ்ஞானிகள் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தான்...

இவர் 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ம் தேதி ஜெர்மனியில் பிறந்தார். பல அளப்பறிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டறிந்த ஐன்ஸ்டீன் தனது  மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் கற்கும் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர்,எப்போதும் மந்தமாகவே காணப்படுவார். அறிவியல் மீது  ஐன்ஸ்டீனுக்கு ஆர்வம் பிறந்தபோது அவருடைய வயது  4. 

ஒருமுறை அவரது தந்தை அவருக்கு காம்பஸ் என்ற திசைகாட்டி கருவியைப் பரிசாக தந்தார் .அதனுள் இருந்த காந்தம் அவரை அறிவியல் உலகம் நோக்கி ஈர்த்தது. அதன் விளைவு அவர் பிற்காலத்தில் உருவாக்கிய இன்றளவும் உலகின் தலைச்சிறந்த சமன்பாடாக கருதப்படும்.
 
நிறைக்கும் ஆற்றலுக்கும் உள்ள தொடர்பு குறித்து இவர் உருவாக்கிய சூத்திரமான E = mc2 தான். மேலும் அதுவரை உலகம்  கேள்விப்படாத பல்வேறு விஷயங்களை கண்டறிந்தார். முக்கியமாக அண்ட சராசரங்களின் செயல்பாட்டை விளக்க நியூட்டனின் தத்துவங்கள் போதாது என்ற நிலையில், தனது சிறப்பு சார்பியல் கோட்பாட்டை (special theory of relativity) முன் வைத்து, பல்வேறு சிக்கலான கேள்விகளுக்கு விடை தேடித் தந்தார்.

இப்படிப்பட்ட அறிவியல் ஞானம் கொண்ட இவரின் மிகச்சிறந்த தத்துவங்கள் 

"இந்த உலகில் எதுவும் நிலையானது அல்ல ;  எடை, வடிவம் , நேரம் உட்பட எல்லாம் மாறக்கூடியது தான், இந்த உலகில் மாறாதது என்று ஒன்று உள்ளது என்றால் அது ஒளி மட்டும் தான்".

"அறிவியல் கண்டுபிடிப்புகள் மனித குல மேம்பாட்டுக்குப் பயன்பட வேண்டுமே தவிர, மனித குலத்தின் அழிவுக்குப் பயன்படுத்தக்கூடாது” 

ஆராய்ச்சிக்கு உள்ளான ஐன்ஸ்டீனின் மூளை:

உலகின் மாபெரும் விஞ்ஞானியாக கருதப்படும் இவர், 1955ம் ஆண்டு இறந்தபோது அவரது மூளையை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இதை அவரது குடும்பமும் ஏற்றுக் கொண்டதையடுத்து இவரது மூளை தனியே எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது.

40 பகுதியாய் பிரிக்கப்பட்ட ஐன்ஸ்டீனின் மூளை:

டெம்போரல் லோப் என்பது மூளையின் கீழ் பகுதி. இது வாசனை, கேட்கும் திறன், முக பாவனைகளைத் தருவது. லிம்பிக் லோப் மூளையின் மத்தியப் பகுகியில் உள்ளது. இது தான் நமக்கு நினைவாற்றல், குணநலன்களைத் தருவது. இன்சுலார் கார்டெக்ஸ் மூளையின் போர்வை போன்றது. இது தான் வலி உள்ளிட்டவற்றை உணர வைப்பது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை 240 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடம் ஆராய்ச்சிக்காக தரப்பட்டது. இதைப் பிரித்தவர் அப்போது மிகப் பிரபலமாக இருந்த நோய்த் தடுப்பு ஆராய்ச்சி வல்லுனரான டாக்டர் தாமஸ் ஹார்வி.

இந்த 240 பாகங்களும் மூளை நரம்பியல் டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், உளவியல் ஆராய்ச்சியாளர்கள் என பல்வேறு தரப்பினரிடம் பிரித்துத் தரப்பட்டு அதில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து இந்த மூளைப் பகுதிகளில் பல காணாமல் போய்விட்டன. ஆனாலும் இந்த ஆராய்ச்சியாளர்கள் எழுதி வைத்த குறிப்புகளை வைத்து சமீபத்தில் ஐன்ஸ்டீனின் மூளை குறித்து ஒரு சில முடிவுகளுக்கு வந்துள்ளனர் விஞ்ஞானிகள். குறிப்பாக அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழகத்தின் மனித பரிணாமம் குறித்த ஆராய்ச்சிப் பிரிவின் தலைவரான டீன் பால்க் தலைமையிலான குழு, ஐன்ஸ்டீனின் மூளையின் சில பகுதிகளில் மிக அதிகமான மடிப்புகளும், பள்ளங்களும் (grooves) மிக அதிகமாக இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.

85 பிற மூளைகளுடன் ஒப்பிட்டு இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. ஐன்ஸ்டீனின் மூளையின் எடை என்னவோ மற்றவர்களைப் போலவே சராசரி எடை கொண்டதாகவே இருந்துள்ளது. ஆனால், அதன் மடிப்புகள், முகடுகளின் (ridges) எண்ணிக்கை மிக மிக அதிகமாக இருந்துள்ளது. மேலும் ஒரு விஷயத்தை மிகக் கூர்மையாக ஆராயும் திறனையும் முன்யோசனையையும் தரும் prefrontal cortex பகுதி ஐன்ஸ்டீனின் மூளையில் கொஞ்சம் பெரிதாகவே இருந்ததும் உறுதியாகியுள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், சிரியா, ரசியா, சீனா போன்ற வல்லரசு நாடுகள் அணு ஆயுதத்தில் இன்றும் சிறந்த விளங்க காரணமாக இருப்பது ஐன்ஸ்டீன்  இயக்க விதி கண்டுபிடிப்பால்தான் என்று சொன்னால் அது மிகையாது.
 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை