May 24, 2019 Friday 07.04 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 11 2019 7:23 PM

பேட்ட, விஸ்வாசம் - ஆணையர் குழு அமைப்பு 

Posted Date : Jan 11 2019 7:23 PM

பேட்ட, விஸ்வாசம் திரைப்படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்திரவிட்டுள்ளது.

மகேந்திரபாண்டி என்பவர் அதிக கட்டணம் வசூல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், புதிய திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டும் தொடர்ந்து திரையரங்குகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரைப்படத்தை திரையிடும் திரையரங்குகளை ஆய்வு செய்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டனர். 

ஒவ்வொரு திரையரங்கிற்கும் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்படுவதாகவும், அந்த குழுவில் மாநகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் இடம் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் பதினேழாம் தேதி வரை ஆய்வு செய்து பதினெட்டாம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை