February 24, 2019 Sunday 10.25 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 22 2019 10:38 AM

இதுவரை இல்லாத அளவுக்கு எனக்கு பேனர் வைக்க வேண்டும் - ரசிகர்களுக்கு சிம்பு வேண்டுகோள் 

Posted Date : Jan 22 2019 10:38 AM

எனது திரைப்படம் வெளியாகும் போது இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள் என நடிகர் சிம்பு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியிருப்பதாவது:

இதற்கு முன்பு நான் ஒரு காணொளி வெளியிட்டிருந்தேன். அதில் என்னுடைய ரசிகர்கள் எனக்கு பேனர் வைக்க வேண்டாம் என்றும், அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்க வேண்டாம் என்றும் கூறியிருந்தேன். மேலும் ரசிகர்கள் தங்கள் பெற்றோருக்கு புத்தாடை வாங்கி தந்து பொங்கல் கொண்டாட வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.

எனக்கு இருப்பதே இரண்டு மூன்று ரசிகர்கள்தான் என்று கூறுகிறார்கள். 

இப்போது சொல்கிறேன், எனக்கு இருக்கும் அந்த இரண்டு மூன்று ரசிகர்கள் என்னுடைய கட் அவுட்களுக்கு பாக்கெட்டுகளில் பால் ஊற்றாமல் குடத்தில் ஊற்றுங்கள். இதுவரை இல்லாத அளவுக்கு பேனர் வையுங்கள் என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.

விமர்சனம் செய்தவர்களுக்காக பேனர், கட் அவுட்டுகளுக்கு பால் ஊற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார். சிம்புவின் இந்த காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Suggest a
correction
View
Comments
Post
Comments