February 24, 2019 Sunday 10.40 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 23 2019 12:55 PM

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்: செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி வெளியேற்றம்

Posted Date : Jan 23 2019 12:55 PM

மெல்போர்ன் நகரில் நடந்து வரும் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றைய்பிரிவு காலிறுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்து அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் வெளியேறினார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டங்கள் இன்று நடந்தன. செக்குடியரசு வீராங்கனை கரோலினா பிலிஸ்கோவாவை முன்னாள் சாம்பியனும் அமெரிக்க வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் எதிர்கொண்டார்.

முதல் செட்டை ஆவேசமான சர்வீஸ்கள், பந்த திருப்பி அனுப்பும் வேகம், ஏஸ்கள் ஆகியவற்றால் 6-4 என்று செரினா வென்றார்.

ஆனால், 2-வது செட்டில் செரீனாவுக்கு கடும் நெருக்கடி அளிக்கும் வகையில், பிலிஸ்கோவா விளையாடினார். இதனால், செரினா 4-6 என்ற கணக்கில் 2-வது செட்டை இழந்தார். 

வெற்றியாளரை முடிவு செய்யும் 3-வது செட்டில் இருவரும் கடுமையாக மோதிக்கொண்டனர். ஆட்டம் டைபிரேக்கர்வரை சென்ற நிலையில் 7-5 என்ற கணக்கில் செரினாவை தோற்கடித்தார் பிலிஸ்கோவா. 

அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை ஓசாகாவை பிலிஸ்கோவா எதிர்கொள்கிறார்.

கடந்த 1994-ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஜப்பானிய பெண் ஒசாகா ஆவார். கடைசியாக 25 ஆண்டுகளுக்கு முன் கிமோகோ டேட் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.

24 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற வீராங்கனையான மார்கிரெட் கோர்ட் சாதனையை சமன் செய்துவிடலாம் என்ற கனவில் இருந்த செரீனாவுக்கு இந்தத் தோல்வி அதிர்ச்சியாக அமைந்தது.

Suggest a
correction
View
Comments
Post
Comments