February 24, 2019 Sunday 10.56 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 23 2019 3:46 PM

நியூசிலாந்து அணியுடனான முதல் ஒருநாள் போட்டி - இந்தியா அபார வெற்றி 

Posted Date : Jan 23 2019 3:46 PM

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் நடைபெற்றது.  இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மார்டின் குப்தில் ( 5 ரன்கள்) கோலின் முண்ட்ரோ ( 8 ரன்கள்) ஆகியோரை சமி அடுத்தடுத்து வீழ்த்தினார். இந்திய அணியின் நேர்த்தியான பந்து வீச்சால், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து நியூசிலாந்து அணி தத்தளித்தது. 

கேப்டன் வில்லியம்ஸ்சன் மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து அரைசதம் விளாசினார். அவரைத்தவிர ஏனைய பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை அளித்த வில்லியம்சனையும் (64 ரன்கள்) குல்தீப் யாதவ் பெவிலியனுக்கு அனுப்பினார். 38 ஓவர்கள் தாக்குப்பிடித்த நியூசிலாந்து அணி 157 ரன்களில் ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், சமி 3 விக்கெட்டுகளையும் அள்ளினர்.  இதையடுத்து, இந்திய அணிக்கு 158 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதனை அடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாடினர்.  ஆனால் இந்திய அணியினர் சூரிய ஒளியால் பந்து வீச்சை எதிர்கொள்ள சிரமப்பட்டனர்.  இதனால் ஆட்டம் அரை மணிநேரம் நிறுத்தப்பட்டது.  இதனை தொடர்ந்து 49 ஓவர்கள் வரை பந்து வீச முடிவானது. வெற்றி இலக்கு 156 ஆக மாற்றி அமைக்கப்பட்டது.

இந்த நிலையில், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் (11) ரன்கள் எடுத்து வெளியேறினார். ரோகித் ஆட்டமிழந்த பின்னர் விளையாடிய கோலி (45) ரன்கள் எடுத்து பெர்குசன் பந்தில் விக்கெட் கீப்பர் லாத்தமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராயுடு (13) ரன்களுடன் ஆட்டமிழக்கவில்லை. தொடக்க வீரராக களமிறங்கிய தவான் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments