February 24, 2019 Sunday 11.22 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 26 2019 12:17 PM

இரண்டாவது ஒருநாள் போட்டி: நியூசிலாந்துக்கு இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி 

Posted Date : Jan 26 2019 12:17 PM

நியூசிலாந்து-இந்தியா இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 325 ரன்களை நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேப்பியரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளும் மோதும் 2வது ஒரு நாள் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான், ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினார்கள். அரை சதம் கடந்த இருவரும், நியூசிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஷிகர் தவான் 66  ரன்களும், ரோகித் சர்மா 87 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். அப்போது, அணியின் ஸ்கோர் 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பின்னர் களமிறங்கிய விராட் கோலி 43 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அம்பதி ராயுடு மற்றும் தோனி இருவரும் அணியின் ஸ்கோரை மேலும் உயர்த்தினர். ராயுடு 47 ரன்களில் ஆட்டமிழந்ததார். 

50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது. கேதர் ஜாதவ், 3 பவுண்டரி ஒரு சிக்சருடன், 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டோனி 48 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இதையடுத்து 325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. சற்று முன்பு வரை அந்த அணி 6 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்களை எடுத்துள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments