February 24, 2019 Sunday 11.15 AM
Newsletter Home

சற்றுமுன்

Tamil
Posted Date : Jan 27 2019 6:50 PM

11 பேரைக் கொன்ற எலிகள்!

Posted Date : Jan 27 2019 6:50 PM

சிலி மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளில் புதிய ஹண்டா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் எலியின் மூலம் பரவுவதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து உலக சுகாதார அமைப்பு, "ஹண்டா வைரஸ் தாக்குதலால் சிலி நாட்டில் மட்டும் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  வைரசால் பாதிக்கப்பட்ட 22 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வைரஸ் தாக்கப்பட்ட கிராமத்திலிருந்து பொதுமக்கள் அனைவரும் வெளியேறிவிட்டனர். ஹன்டா வைரசால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க 50 விழுக்காடு மட்டுமே வாய்ப்பு உள்ளது" என தெரிவித்துள்ளது.

மேலும் இது குறித்து மருத்துவர்கள், "ஹண்டா வைரஸ் எலிகளின் மூலம் மனிதர்களுக்குப் பரவுவதால் விவசாயிகளை பெருமளவு தாக்கும். மனிதன் மூலம் மனிதனுக்கு இந்த வைரஸ் பரவுவதில்லை. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  சாதாரண வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தெரியும். காய்ச்சல் வறட்டு இருமல், தலைவலி ஏற்படும் பின் சுவாசக் கோளாறு இரத்தப் போக்கு ஏறபட்டு உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து மரணம் ஏற்படும். இந்த வைரஸ் தாக்கியவர் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை பொருத்து அதன் பாதிப்பை உணர்வர்." என்று தெரிவித்துள்ளனர்.

Suggest a
correction
View
Comments
Post
Comments