February 24, 2019 Sunday 10.46 AM
Newsletter Home

சற்றுமுன்

Tamil
Posted Date : Jan 27 2019 7:55 PM

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா!

Posted Date : Jan 27 2019 7:55 PM

இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்தாவில் நடந்தது. இதில் பரிசுத்தொகையாக மொத்தம் ரூ.2½ கோடி அறிவிக்கப்பட்டது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேக்வால், உலக மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்தித்தார். இருவரும் இதுவரை 11 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கிறார்கள்.

இதில் 5–ல் சாய்னாவும், 6–ல் மரினும் வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆட்டம் தொடங்கியது. கரோலினா இன்றைய ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டார் . சாய்னாவின் தவறுகளையும் புள்ளிகளாக்கி 10-3 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார் கரோலினா. பின்னர் காயம் காரணமாக போட்டியிலிருந்து கரோலினா விலகியதால் சாய்னா நேக்வால் சாம்பியனாக அறிவிக்கப்பட்டார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments