May 24, 2019 Friday 09.12 AM
Newsletter Home

சற்றுமுன்

Tamil
Posted Date : Jan 28 2019 3:58 PM

நியூசிலாந்தில் தொடரை வென்றது இந்தியா!

Posted Date : Jan 28 2019 3:58 PM

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, கேப்டன் விராத் கோஹ்லி அரைசதமடித்து கைகொடுக்க இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 - 0 எனக் கைப்பற்றியது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டியில் வென்று இந்தியா 2-0 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் மூன்றாவது போட்டி மவுன்ட் மவுன்கனுய் நகரில் நடந்தது. தொடையின் பின்பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்தால் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி விலகியதும், தமிழக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டார்.

'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி 49 ஓவரில் 243 ரன்களுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா சார்பில் முகமது ஷமி 3, புவனேஷ்வர், சகால், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட் கைப்பற்றினர். எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 28 ரன்களும்,  ரோகித் சர்மா 62 ரன்களும், கேப்டன் விராத் கோஹ்லி 60 ரன்களும் எடுத்துவந்தனர். இந்திய அணி 43 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்றவாறு கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. இதன்மூலம் நியூசிலாந்து மண்ணில் 2வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றியது இந்தியா. இதற்கு முன் 2009ல் தோனி தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்றவாறு கைப்பற்றியது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை