February 24, 2019 Sunday 10.43 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Jan 29 2019 2:29 PM

ஆண்கள் அணியை தொடர்ந்து பெண்கள் அணியும் அபாரம்: நியூசியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி 

Posted Date : Jan 29 2019 2:29 PM

ஆண்கள் அணியை தொடர்ந்து பெண்கள் அணியும் நியூசியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றி வசதியுள்ளது. 

5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி நேற்று தொடரை கைப்பற்றியது. ஆடவர் அணியை போல் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியும் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

முதலாவது ஒருநாள் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வென்றிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ்வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 44.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். அணியில் அதிகபட்சமாக சாட்டர்வெய்ட் 71 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்மிழந்தனர்.
 
இந்தியத் தரப்பில் கோஸாமி 3 விக்கெட்டுகளையும், பூனம் யாதவ், பிஸ்த், சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்கள்.

162 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.  தொடக்க வீராங்கனைகளாக ரோட்ரிக்ஸ், மந்தனா களமிறங்கினர். இதில் 2வது ஓவரில் ரோட்ரிக்ஸ் டக்அவுட்டில் வெளியேறினார். அடுத்து வந்த சர்மா 8 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். இதனால், 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

3-வது விக்கெட்டுக்கு மந்தனாவுடன் கேப்டன் மிதாலி ராஜ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தனர். இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மந்தனா 54 பந்துகளில் அரைசதம் அடித்தார், மிதாலி ராஜ் 102 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மந்தனா 90 ரன்களிலும் (13பவுண்டரி,ஒருசிக்ஸர்), மிதாலி ராஜ் 63 ரன்களிலும்(4பவுண்டரி, 2 சிக்ஸர்) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். 3-வது விக்கெட்டுக்கு இருவரும் 151 ரன்கள் சேர்த்தனர். 35.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 166 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

ஸ்மிரிதி மந்தனா, மிதாலி ராஜின் அபாரமான பேட்டிங் திறமையால் நியூசிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.

இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற இந்திய மகளிர் அணி முன்னிலை வகித்து தொடரை வென்றுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments