May 24, 2019 Friday 09.22 AM
Newsletter Home

சற்றுமுன்

Tamil
Posted Date : Jan 30 2019 12:01 PM

சூடானில் ரொட்டி விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தில் 30 பேர் பலி!

Posted Date : Jan 30 2019 12:01 PM

சூடான் நாட்டில் ரொட்டி உற்பத்திக்கான அரசு மானியங்கள் நிறுத்தப்பட்டது இதனால் ரொட்டி விலை கடுமையாக உயர்ந்து பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டக்காரர்கள் பல்வேறு பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போராட்டத்தில் கடைகளை சூறையாடி பொருட்களை எடுத்துச் செல்வதும் அதிகரித்தது. போராட்டக்காரர்களை ஒடுக்க கலவர தடுப்பு பிரிவு போலீசார் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. கடந்த மாதம் நடந்த போராட்டங்களில் பலர் உயிரிழந்தனர். இந்த மாதமும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்தவண்ணம் இருக்கிறது. அதேசமயம் அரசுக்கு ஆதரவாகவும் பேரணி நடைபெற்றது.

அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் வன்முறையில் கடந்த 21-ம் தேதிவரை 24 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. போராட்ட நிலையை விசாரணை மேற்கொள்ளும் கண்காணிப்பு குழுவின் தலைவர் அமீர் அகமது இப்ராகிம், இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை