May 24, 2019 Friday 09.07 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 5 2019 4:35 PM

ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதலில் 28 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம்

Posted Date : Feb 5 2019 4:35 PM

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பு, கைப்பற்றியுள்ள சில பகுதிகளையும் தாண்டி அதன் எல்லையை விரிவுபடுத்த பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்த தாக்குதல்களில் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் ஏராளமானோர் கொல்லப்படுகின்றனர்.
 
இந்நிலையில் குண்டஸ் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் தங்கியிருந்த முகாம்கள் மீது தலிபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 28 பாதுகாப்பு படை அதிகாரிகள் வீர மரணம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், குண்டஸ் மாகாணத்தின் தலாவியா பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை