May 24, 2019 Friday 07.01 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 6 2019 5:28 PM

பிரபல தெலுங்கு நடிகை நாகா ஜான்சி தற்கொலை 

Posted Date : Feb 6 2019 5:28 PM

பிரபல தெலுங்கு நடிகை நாகா ஜான்சி ஐதராபாத்தில் நேற்று தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகை நாகா ஜான்சி (21). இவர் பவித்திரா பந்தேம் டிவி தொடரில் நடித்து பிரபலமானவர். இந்நிலையில் ஜான்சி தன்னுடைய வீட்டில் நேற்று நீண்ட நேரமாக வீட்டின் கதவை திறக்காமல் இருந்துள்ளார். அவருடைய சகோதரர் கதவை தட்டியும் பதில் இல்லை. இதனால் பதற்றம் அடைந்த அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஜான்சி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

ஜான்சியின் கைப்பேசியை கைப்பற்றிய காவல்துறையினர் தற்கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர். ஜான்சி உயிரிழப்பதற்கு முன்னதாக நீண்ட நேரமாக ஆண் ஒருவருடன் மொபைல் ஷாட் செய்து வந்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்த நபருடன் 6 மாதங்களுக்கு முன்பாக ஜான்சிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நபருடன் ஜான்சி பழகிவந்ததை அவருடைய பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும்  கூறப்படுகிறது.

ஜான்சியின் மொபைலை பறிமுதல் செய்த காவல்துறையினர் தகவல்களை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை