May 24, 2019 Friday 09.22 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 7 2019 1:31 PM

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு - வீட்டு கடன் மீதான வட்டி விகிதம் குறைய வாய்ப்பு!

Posted Date : Feb 7 2019 1:31 PM

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீட்டு கடன், வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்பிஐ 6வது நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 0.25 சதவீதம் குறைத்து 6.25 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீட்டு கடன், வாகன கடன் மீதான வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்புள்ளது.

2017 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு முதன் முறையாக ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிபந்தனையில்லா கடன் அளவை 60,000 ரூபாயிலிருந்து 1.60 லட்சம் ரூபாயாக ஆர்பிஐ உயர்த்தியுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை