February 24, 2019 Sunday 11.16 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 8 2019 3:38 PM

 2வது டி20 கிரிக்கெட் போட்டி: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி 

Posted Date : Feb 8 2019 3:38 PM

நியூசிலாந்திற்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி 20 போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி 20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நியூசிலாந்து அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டி கிராண்ட்ஹோம் மட்டும் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். டெய்லர் 42 ரன்களில் நடையை காட்டினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய க்ருனால் பாண்டியா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதனையடுத்து 159 ரன்கள் எடுத்ர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான்-ரோகித் ஜோடி அதிரடி துவக்கம் தந்தது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். 28 பந்துகளில் அரைசதம் கடந்த ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். தவான் 30 ரன்களிலும், விஜய் சங்கர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 

தோனி நிதானமாக ஆட மறுபுறம் ரிஷப் பண்ட் அதிரடியில் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளனர். 

3-வது போட்டி வரும் ஞாயிறன்று ஹாமில்டன் நகரில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Suggest a
correction
View
Comments
Post
Comments