February 24, 2019 Sunday 10.42 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 8 2019 4:32 PM

அதிமுக-பாஜக கூட்டணி முடிவானதாக தகவல்: தொகுதி பங்கீட்டு விவரங்களும் கசிந்தது... 

Posted Date : Feb 8 2019 4:32 PM

அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்த விவரமும் வெளியாகி தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் வட்டாரத்தில் கூறப்படும் தகவல்படி 

அதிமுக - 20

பாஜக -12

தேமுதிக-4

பாமக -4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

பாஜக தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்களில் கொங்கு ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒரு இடமும், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒரு இடமும் , ஏ சி சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு ஒரு இடமும், ரங்கசாமியின் என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 

மீதியுள்ள 8 இடங்களில் பாஜக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரபூர்வமற்ற இந்த தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Suggest a
correction
View
Comments
Post
Comments