May 24, 2019 Friday 09.20 AM
Newsletter Home

சற்றுமுன்

மாயோன்
Posted Date : Feb 8 2019 6:48 PM

பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் வீடு பெறுவது எப்படி ?

Posted Date : Feb 8 2019 6:48 PM

வீடு கட்ட வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் வீடு கட்ட வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற பெயரில் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை 2015 ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 2022-ம் ஆண்டிற்குள் அனைவரும் சொந்த வீட்டுடன் இருப்பதற்காக 2016-ம் ஆண்டு மேலும் கடன் தொகையை இரட்டிப்பாக்கை பல சலுகைகளை அறிவித்துள்ளது.

எனவே பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் முன்பு இருந்த விதிகளில் இருந்து இப்போது என்ன புதிய மாற்றங்கள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது என்றும் எப்படி விண்ணப்பிப்பது என்றும் இங்குப் பார்ப்போம்.  

பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாகவும், பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவாக உள்ளவர்களும் இத்திட்டத்தின் கீழ் வீட்டைக் கட்டுவதற்கான பல சலுகைகளைப் பெறலாம்.

சொந்தமாக இடம் உங்களிடம் வீடு கட்டுவதற்கான சொந்தமாக இடம் இருந்தால் போதும். உங்களுடன் இணைந்து அரசு அளிக்கும் சலுகைகளைப் பயன்படுத்தி வீட்டைக் கட்டிவிடலாம். இப்போது வீடு கட்ட சொந்தமாக இடம் வாங்கவும் திட்டங்கள் உள்ளன.

பழைய விதி நீங்கள் வீடு கட்டப் போகும் இடம் 30 சதுர மீட்டராக இருந்தால் உங்களுடைய வருமானம் வருடத்திற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அதுவே 60 சதுர மீட்டராக இருந்தால் உங்கள் வருமானம் 3 முதல் 6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.   புதிய விதி பழைய விதியில் 3 லடசம் முதல் 6 லட்சம் வரை இருந்த கடன் தொகையை உயர்த்தி 6 லட்சம் முதல் 12 லட்சம் வரை பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை