May 24, 2019 Friday 09.24 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 8 2019 7:33 PM

உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் பலி 

Posted Date : Feb 8 2019 7:33 PM

உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்த 12 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இதில் 12 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது. 
 
சட்ட விரோதமாக நடக்கும் கள்ளச்சாராயம் விற்பனைக்கு உள்ளூர் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக 13 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை