February 24, 2019 Sunday 10.56 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 8 2019 7:48 PM

சாய்வாலா தேர்தலுக்கு பிறகு ரபேல் வாலா என அழைக்கப்படுவார் - பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த மம்தா பானர்ஜி

Posted Date : Feb 8 2019 7:48 PM

சாய்வாலா தேர்தலுக்கு பிறகு ரபேல் வாலா என அழைக்கப்படுவார் என பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு நேற்று தொடங்கி, இன்றுடன் நிறைவு பெற்றது. மாநாடு முடிந்ததும் முதல் மந்திரி மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரதமர் மோடிக்கு இந்தியாவை பற்றி தெரியாது. அவர் கோத்ரா மற்றும் பிற மோதல்களில் இருந்து வந்தவர். தேர்தலுக்கு முன்னால் அவரை சாய்வாலா என அழைத்தோம். ஆனால் தேர்தலுக்கு பிறகு அவர் ரபேல் வாலா என அழைக்கப்பட உள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய ஊழலாக ரபேல் ஊழல் இருந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரசுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ரபேலின் மாஸ்டர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மாஸ்டர். பிரதமர் மோடி ஊழல்களின் மாஸ்டராக விளங்குகிறார்.

பணத்தின் பலத்தால் மோடி பிரதமர் ஆனது மிகவும் துரதிஷ்டவசமானது. எதிர்க்கட்சிகள் ஒன்றாக பணியாற்றுவதால் பிரதமர் மோடி பயப்படுகிறார். ஆனால், எனக்கு பயம் கிடையாது. நான் என்னுடைய பாதையில் போராடுகிறேன். எங்களது கொள்கைக்கு நான் எப்போதும் மதிப்பளிக்கிறேன். 

நாங்கள் பிரதமர் நாற்காலிக்குதான் மரியாதை அளிக்கிறோம். அவருக்கு அல்ல என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments