May 24, 2019 Friday 08.35 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 8 2019 8:44 PM

மக்களவை தேர்தல்: அரசு அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு

Posted Date : Feb 8 2019 8:44 PM

 தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை பணியிடம் மாற்றம் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு, தலைமை தேர்தல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 

ஏற்கனவே பணியிடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் விவரங்களை தரவேண்டும் எனவும், இடமாற்றம் செய்து அதற்கான அறிக்கையை பிப்ரவரி 15ம் தேதிக்குள் தர வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை