May 24, 2019 Friday 09.33 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 9 2019 11:57 AM

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டி - திமுக அறிவிப்பு 

Posted Date : Feb 9 2019 11:57 AM

தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராவர் என்று திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளிவர உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார். ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமத்தை தத்தெடுத்து அங்கு எம்.பி. தொகுதி நிதியின் கீழ் வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார்.

மேலும் அவர் அடிக்கடி தூத்துக்குடி சென்று கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்தித்து வந்தார். கிராம சபை கூட்டத்திலும் கலந்து கொண்டார். இதன் மூலம் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.

இப்போது கனிமொழி தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடுவார் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. உறுதிப்படுத்தியுள்ளார். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கீதாஜீவன் பேசுகையில் இந்த தகவலை வெளியிட்டார். அவர் பேசியதாவது:

வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டனர். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி எம்.பி. போட்டியிட உள்ளார். கனிமொழி 10 ஆண்டுகளாக எம்.பி.யாக இருந்து வருகிறார். ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர். இங்குள்ள பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். இந்த தொகுதியில் அவர் வெற்றி பெற்று நிச்சயமாக மத்திய அமைச்சராகபதவியேற்பார். அதன்பிறகு தூத்துக்குடி மாவட்டத்திற்கு அதிக வளர்ச்சி திட்டங்கள் வரும். மக்களின் குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை