February 24, 2019 Sunday 10.39 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 9 2019 12:34 PM

தேர்தல் பிரச்சாரத்துக்காக பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: மெட்ரோ ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார் 

Posted Date : Feb 9 2019 12:34 PM

பிரதமர் மோடி நாளை திருப்பூரில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்க வருகைதரவுள்ளார். முதல்வர் பழனிசாமியுடன் சேர்ந்து மெட்ரோ ரெயில் சேவையையும் தொடங்கி வைக்கிறார். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 27-ந்தேதி மதுரை வந்த பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு அங்கு நடந்த கூட்டத்திலும் தேர்தல் பிரசாரம் செய்தார்.

தற்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 2-வது கட்டமாக நாளை திருப்பூர் வர இருக்கிறார். அவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 2.35 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.

அங்கிருந்து 2.40 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு 3.05 மணிக்கு பெருமாநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு சென்று சேருகிறார். பின்னர் 3.15 மணி அளவில் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேருகிறார்.

திருப்பூர் பெருமாநல்லூரில் 70 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுக்கூட்ட மேடை அருகே மற்றொரு மேடை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் அரசு திட்ட பணிகளை மோடி தொடங்கி வைக்கிறார்.

சென்னை வண்ணாரப்பேட்டை - டி.எம்.எஸ். இடையே மெட்ரோ ரெயில் இறுதி கட்ட வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் சேவை நாளை தொடங்கப்பட உள்ளது.

இந்த மெட்ரோ ரெயில் சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து தொடங்கி வைக்கிறார்கள். அதோடு அந்த வழித்தடத்தில் ஆயிரம்விளக்கு, எல்.ஐ.சி., அரசினர் தோட்டம், ஐகோர்ட்டு, மண்ணடி மற்றும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களையும் மோடி, எடப்பாடி பழனிசாமி இருவரும் இணைந்து திறந்து வைக்க உள்ளனர்.

அதே நேரத்தில் சென்னையிலும் அதற்கான விழா நடைபெற உள்ளது. இதற்காக சென்னை சென்டிரல் மெட்ரோ ரெயில் நிலையம் பகுதியில் மேடை அமைக்கப்படுகிறது. விழாவில் மத்திய அமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

டி.எம்.எஸ்.- வண்ணாரப்பேட்டை இடையே நாளை மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதன் மூலம் சென்னை மெட்ரோ ரெயிலின் முதல் திட்டப் பணிகள் முழுமையாக நிறைவடைகிறது. ரூ.19 ஆயிரத்து 58 கோடி செலவில் முதல் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 45 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த முதல் கட்ட மெட்ரோ ரெயில் பாதையில் சுரங்கப் பாதையில் 19 ரெயில் நிலையங்களும், உயர்மட்ட பாதையில் 13 ரெயில் நிலையங்களும் அமைந்துள்ளன.

புதிய பாம்பன் பாலம் கட்டும் பணிக்கும் பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். பரமக்குடி- தனுஷ்கோடி இடையே 4 வழிப்பாதை, ராமேசுவரம்-தனுஷ்கோடி ரெயில் பாதை ஆகியவற்றுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

3.30 மணி அளவில் நலத்திட்டப் பணிகள் தொடக்க விழாவை முடித்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அரசு விழா முடிந்ததும் அதே பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

இதில் திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், பொள்ளாச்சி, கரூர் ஆகிய 8 தொகுதிகளை சேர்ந்த பாரதிய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள். 

பாதுகாப்புக்காக கோவை - திருப்பூரில் 10 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோவை விமான நிலையத்தில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Suggest a
correction
View
Comments
Post
Comments