February 24, 2019 Sunday 10.39 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 9 2019 2:32 PM

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியா? - கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் விளக்கம் 

Posted Date : Feb 9 2019 2:32 PM

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட நடிகர் மோகன்லாலை தொடர்ந்து கிரிக்கெட் வீரர் சேவாக்கும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களை களமிறக்க பாஜக முயன்று வருகிறது.

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளது என தகவல் வெளியானது. ஆனால், தேர்தலில் போட்டியிடும் திட்டமில்லை என்று மோகன்லால் மறுப்பு தெரிவித்தார். மேலும், அரசியலுக்கு வரமாட்டேன். பாஜகவில் சேரும் விருப்பமும் இல்லை எனவும் அவர் கூறினார்.

இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாஜக சார்பில் ஹரியாணா மாநிலம் ரோத்தக் தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகின.

இதனை சேவாக் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறுகையில் "2014-ம் ஆண்டு வந்த வதந்திதான். தற்போதும் உலா வருகிறது. இதில் புதுமை எதுவுமில்லை. துளியும் உண்மையில்லை. அப்போதும் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதும் சரி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை" எனக் தெரிவித்துள்ளார். 

மேலும் சேவாக் மக்களவைத் தேர்தலில் போட்டி என வெளியான செய்தியையும் தனது ட்வீட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments