#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
சூடான் நாட்டில் அவசர நிலை பிரகடனம்; ஆட்சி கலைப்பு
திருத்தணி அருகே இளைஞர் கொலை: விபரீதத்தில் முடிந்த டிக் டாக் மோகம்
பெங்களுருவில் விமான கண்காட்சி அருகே தீவிபத்து: 150 கார்கள் தீயில் எரிந்து நாசம்
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் - கீ.வீரமணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு தலைவர் உட்பட 12 பேர் கைது: துணை ராணுவ படையினர் குவிப்பு; பதற்றம்
இந்தியாவில் குழந்தை திருமணங்கள் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் வட மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் சாதாரணமாக நடக்கக்கூடியவை. இந்நிலையில் குழந்தை திருமணங்களின் சதவீதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
2005-06-ல் தேசிய குடும்ப சுகாதார சர்வே -3 NFHS-3 நடத்தப்பட்டபோது, பீகார் குழந்தை திருமணங்களில் 47.8 சதவீதம் என முதலிடம் வகித்தது. அதற்கடுத்து 44.7 சதவீதம் என ஜார்கண்ட் 2-வது இடத்தில் இருந்தது. 3-வது இடத்தில் பீகார் 40.4 சதவீதம் என இருந்தது. நான்காவது இடத்தில் வங்காள தேசம் இருந்தது.
ஆனால் பத்தாண்டுகளுக்குப் பிறகு, பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற சில மாநிலங்களில் 20- சதவீதக்கும் அதிகமாக குழந்தைகள் திருமணம் குறைக்கப்பட்டு உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் அதே காலகட்டத்தில், மேற்குவங்காளத்தில் மட்டும் 8.4 சதவீதம் தான் குறைந்து உள்ளது.
மாவட்ட அளவு ஆய்வில் மேற்குவங்காளத்தில் முர்ஷிதாபாத் 39.9 சதவீதம் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் உள்ளன. அடுத்து குஜராத்தின் காந்தி நகர் 39.3 சதவீதம் என்ற அளவிலும், ராஜஸ்தானின் பில்வார மாவட்டம் 36.4 சதவீதம் எனவும் உள்ளன. பீகாரில் அதிக்கபடியான மாவட்டங்களில் 20 சதவீத அளவிற்கு குழந்தை திருமணம் நடக்கிறது. அடுத்து வங்காள தேசத்தில் 14 சதவீதமும், ஜார்கண்டில் 11 சதவீதமும் குழந்தை திருமணம் நடக்கிறது.
தேசிய குடும்ப சுகாதார சர்வே 4 ஆய்வில் நகர்ப்புற இந்தியா கிராமப்புறத்தை விட சிறப்பாக உள்ளது. கிராமப்புறங்களில் குழந்தைகளின் திருமணம் சராசரியாக 14 சதவீதமும், நகர்ப்புறத்தில் 6.9 சதவீதமாகவும் உள்ளது. இது நேரடியாக வருமானத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிகமான படித்தவர்களும், வருமானம் உள்ள பெண்கள் குடும்பமும் குழந்தை திருமணம் செய்து கொள்வது குறைவாகவே உள்ளது.
குழந்தைகள் திருமணம் வருமானம் குறைவாக உள்ள குடும்பத்திலேயே அதிகம் நடைபெறுகிறது. அதுபோல் கல்வியறிவு குறைவாக உள்ள குடும்பத்திலும் குழந்தைகள் திருமணம் அதிகமாக உள்ளது.
சமுதாய அழுத்தம் மற்றும் குடும்ப திட்டமிடல் பற்றிய அறிவு இல்லாமை காரணமாக பெரும்பாலான குழந்தை திருமணங்களால் இளம் வயதிலேயே பெண்கள் கர்ப்பம் தரிக்கின்றனர். 15 மற்றும் 19 வயதிற்குள் திருமணம் செய்துகொள்ளும் மூன்று பெண்களில் ஒருவர் இளம் வயதினராக இருக்கும்போதே குழந்தை பெற்றெடுக்கிறார். கோவா, மிசோரம், மேகாலயாவில் சிறுவயதில் திருமணம் செய்தவர்கள் குழந்தை பெறுவதும் அதிகரித்துள்ளது.
அவர்களில் 25 சதவீதம் 17 வயதிற்குட்பட்டவா்களுக்கும் , 18 வயதிற்குட்பட்டவர்களில் 31 சதவீதத்தினருக்கும் ஒரு குழந்தை உள்ளது.