February 24, 2019 Sunday 11.13 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 9 2019 4:11 PM

ராமர் இந்து மக்களுக்கு மட்டும் மூதாதையர் அல்ல முஸ்லிம்களுக்கும் அவர்தான் மூதாதையர் - பாபா ராம்தேவ்

Posted Date : Feb 9 2019 4:11 PM

ராமர் இந்து மக்களுக்கு மட்டும் மூதாதையர் அல்ல முஸ்லிம்களுக்கும் அவர்தான் மூதாதையர் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், கேடர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற யோகாசன முகாமில் பங்கேற்ற பிரபல யோகாசன குரு பாபா ராம்தேவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

ராமர் பிறந்த இடம் அயோத்திதான் ராமஜென்ம பூமி என்பது சர்ச்சைகளுக்கு இடமில்லாத உண்மையாகும். ராமர் இந்து மக்களுக்கு மட்டும் மூதாதையர் அல்ல முஸ்லிம்களுக்கும் அவர்தான் மூதாதையர்.

ராமருக்கு கோவில் கட்டுவது நமது நாட்டுக்கான பெருமிதம். அயோத்தியில்தான் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அயோத்தியில் இல்லாவிட்டால் வேறெங்கு ராமருக்கு கோவில் கட்ட முடியும்?. மெக்காவிலோ, மதினாவிலோ, வாடிகன் நகரிலோ நிச்சயமாக நம்மால் ராமருக்கு கோவில் கட்டவே முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Suggest a
correction
View
Comments
Post
Comments