February 24, 2019 Sunday 11.07 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 9 2019 5:42 PM

நாமக்கல்லில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி இருவர் பலி

Posted Date : Feb 9 2019 5:42 PM

நாமக்கல்லில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.

கோவையிலிருந்து அரசு பேருந்து ஒன்று நாமக்கல்லை நோக்கி சென்றுகொண்டிருந்தது. நாமக்கல் அருகே சாலையின் வலதுபுறம் நின்றுக்கொண்டிருந்த லாரி ஒன்று திடீரென சாலையின் இடதுபுறம் கடக்க முற்பட்டது. அப்போது வேகமாக வந்த அரசு பேருந்து ஓட்டுநர் லாரியின் மீது மோதாமல் இருக்க பேருந்தை இடதுபக்கமாக திருப்பினார்.

பேருந்து வேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக சென்றவர்கள் மீது மோதி சற்று தூரம் சென்று நின்றது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. காவல்துறையினர்  விசாரித்து வருகின்றனர்.

Suggest a
correction
View
Comments
Post
Comments