February 24, 2019 Sunday 10.23 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 9 2019 7:08 PM

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு 

Posted Date : Feb 9 2019 7:08 PM

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 70 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்டின் ஹரித்துவார் மாவட்டம் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. நேற்று இரவு இதை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

இதில் 12 பேர் பலியானதாக முதல் கட்டமாக தகவல் வெளியானது. மேலும், பலர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிலையில், கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசத்தின் சஹரான்பூரில் 46 பேரும், உத்தராகண்டில் 24 பேரும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணை போன உள்ளூர் அதிகாரிகள் 13 பேரை மாவட்ட நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Suggest a
correction
View
Comments
Post
Comments