February 24, 2019 Sunday 10.57 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 9 2019 8:22 PM

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பலி

Posted Date : Feb 9 2019 8:22 PM

ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 20 பேரில் காவல்துறையினர் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தின் வடபகுதியில் அமைந்துள்ள காவல் சோதனை சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் உள்பட 20 பேர் சிக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் 10 காவலர்களை பத்திரமாக மீட்டனர். நேற்று நடைபெற்ற மீட்புப் பணியில் 5 காவலர்கள் மற்றும் 2 கைதிகளின் உடல்களை மீட்டனர். மேலும், 2 காவலர்களை உயிருடன் மீட்டனர். 

இந்நிலையில், இன்று நடைபெற்ற மீட்புப் பணியின்போது காணாமல் போன மற்றொரு காவலரின் உடலை மீட்டனர். இதையடுத்து, ஜம்மு காஷ்மீரின் பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Suggest a
correction
View
Comments
Post
Comments