May 24, 2019 Friday 07.04 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 11 2019 10:55 AM

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து: டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவங்கினார் சந்திரபாபு நாயுடு

Posted Date : Feb 11 2019 10:55 AM

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி சந்திரபாபு நாயுடு டெல்லியில் உள்ள ஆந்திரா பவனில் இன்று "தர்ம போரட்ட தீக் ஷா"  எனும் பெயரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தைத் மேற்கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு உறுதியளித்து இருந்தது. ஆனால், சொன்னபடி அதை நிறைவேற்றவில்லை. இதனையடுத்து பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகினார். கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக மத்திய அரசுக்கு எதிராகத் தொடர் எதிர்ப்பை சந்திரபாபு நாயுடு வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரியும் முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லியில் இன்று காலை 8 மணிக்கு ஆந்திரா பவனில் "தர்ம போரட்ட தீக் ஷா" என்ற பெயரில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார். இந்தப் போராட்டம் இன்று இரவு 8 மணிவரை நடக்கிறது. இந்த போராட்டத்தில் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், எம்.பி.க்கள், பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டம் முடிந்தபின் நாளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சந்திரபாபு நாயுடு மனு அளிக்க உள்ளார்.

Comments Here

  • கருத்துகள் எதுவும் கிடைக்கவில்லை