#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
சூடான் நாட்டில் அவசர நிலை பிரகடனம்; ஆட்சி கலைப்பு
திருத்தணி அருகே இளைஞர் கொலை: விபரீதத்தில் முடிந்த டிக் டாக் மோகம்
பெங்களுருவில் விமான கண்காட்சி அருகே தீவிபத்து: 150 கார்கள் தீயில் எரிந்து நாசம்
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் - கீ.வீரமணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு தலைவர் உட்பட 12 பேர் கைது: துணை ராணுவ படையினர் குவிப்பு; பதற்றம்
காமராஜர் விரும்பிய ஊழல் இல்லாத ஆட்சியை நாங்கள் வழங்கி வருகிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நேற்று திருப்பூர் வந்த பிரதமர் மோடி மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொடங்கிவைத்தார். குறிப்பாக திருப்பூரில் 100 படுக்கைவசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை, சென்னை மற்றும் திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை கே.கே. நகரில் இ.எஸ்.ஐ.சி. மருத்துவக் கல்லூரி மற்றும் 470 படுக்கை வசதிகளுடன் கூடிய இ.எஸ்.ஐ.சி. மருத்துவமனை, எண்ணூரில் கடற்கரை துறைமுகம், சென்னை துறைமுகம் முதல் மணலி சுத்திகரிப்பு நிலையம் வரை புதிய கச்சா எண்ணெய் குழாய் பதிப்பு திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சென்னை மெட்ரோ முதல்கட்ட பயணிகள் சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால், முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் வி.சத்யபாமா உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இதனையடுத்து பாஜக பொதுக்கூட்ட பிரச்சாரத்தில் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை என துணிச்சலுக்கும், தைரியத்துக்கும் பெயர் பெற்ற மண் இது. இவர்களின் வாழ்க்கை இந்த நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை வழங்கி கொண்டிருக்கிறது. உலக நாடுகளுக்கு உதாரணமாக திகழ்கிறது திருப்பூர். தொழில்முனைவோர் மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையுடன் மக்களை பெற்றுள்ள பகுதி திருப்பூர். நாடு முழுவதும் உதாரணமாக திகழ்கிறது திருப்பூர்.
இந்திய அரசு செயல்படும் முறை மாறி உள்ளது. முந்தைய அரசு, நாட்டின் பாதுகாப்புத் துறைக்கு எதுவும் செய்யவில்லை. தரகர்களின் நலனுக்காக அவர்கள் செயல்பட்டு வந்தார்கள். கடல் முதல் ஆகாயம் வரை காங்கிரஸ் கட்சியில் ஊழல் இருந்தது. நாம்பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்றவராக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். இந்தியாவில் புதிய இரண்டு பாதுகாப்பு தொழில்நுட்ப பூங்காக்கள் அமைய உள்ளன. அதில் ஒன்று தமிழகத்தில் அமைய உள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும்.
நடுத்தர வர்க்கத்தின் நலனுக்கான பல திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். ஆண்டு வருமானம் ரூ. 5 லட்சம் கொண்டிருப்பவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளித்துள்ளோம். தமிழகத்தைச்சேர்ந்த ‘முன்னாள் மறுவாக்கு எண்ணிக்கை’ அமைச்சர் தன்னை மட்டும்அறிவாளியாக நினைத்து பேசுகிறார். நடுத்தர வர்க்க மக்களை ஏளனமாக பேசினார். அதனால்தான் அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த காமராஜர் ஊழல் இல்லாத ஆட்சியை விரும்பினார். அதை நாங்கள் வழங்கி வருகிறோம். ஊழல் இல்லாத ஆட்சியை, மத்திய அரசு இன்றைக்கு நாட்டுக்கு வழங்கி வருகிறது. போலி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. போலி பயனாளிகள் நீக்கப்பட்டுள்ளனர். இடைத்தரகர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். ஐஸ்கீரிம், ரீசார்ஜ் பேமிலி பேக்கேஜ் போல் குடும்பத்துக்கு ஜாமீன் பேக்கேஜ் பெறுகின்றனர். தமிழக மக்கள் புத்திசாலிகள். அவர்கள் கலப்பட கூட்டணியை விரும்பமாட்டார்கள். மக்கள் தூக்கி எறிவார்கள். பணக்காரர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். அவர்களின் நோக்கம் குடும்பம் மற்றும் வாரிசு அரசியலை முன்னிறுத்துவதுதான்.
அனைவருக்கும் சமமான வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம்.
பொதுப்பிரிவு ஏழை மக்களுக்கு10 சதவீதம் இட ஒதுக்கீட்டை வழங்கினோம். இதன்மூலமாக ஏற்கெனவேஉள்ள பட்டியல், மலைவாழ், இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு எந்தவிதத்திலும் இடஒதுக்கீடு பாதிக்கப்படாது. சமூக நீதி என்பது கணிதம் அல்ல. அதுநம்பிக்கையின் வெளிப்பாடு. சமூகநீதிக்கு எதிராக பாஜக செயல்படவில்லை. திமுக, காங்கிரஸும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை நீக்கினார்கள். வாஜ்பாய் அரசு அதனை மீண்டும் கொண்டு வந்தது. இவ்வாறு அவர் பேசினார்.