#drone #funny #catgif #broken #lost #hilarious #good #red #blue #nono #why #yes #yesyes #aliens #green
#broken #lost #good #red #funny #hilarious #catgif #blue #nono #why #yes #yesyes #aliens #green #drone
மார்ச் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
அசாமில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 69 ஆக உயர்வு
அரசு வேலை பெற பணம் கொடுப்பவர்கள் மீது குற்ற நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
சூடான் நாட்டில் அவசர நிலை பிரகடனம்; ஆட்சி கலைப்பு
திருத்தணி அருகே இளைஞர் கொலை: விபரீதத்தில் முடிந்த டிக் டாக் மோகம்
பெங்களுருவில் விமான கண்காட்சி அருகே தீவிபத்து: 150 கார்கள் தீயில் எரிந்து நாசம்
மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம் - திமுக அறிவிப்பு
உலக துப்பாக்கி சுடுதல் போட்டி: இந்திய வீராங்கனை தங்கம் வென்றார்
எனக்கு பிறகு திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் இருப்பார் - கீ.வீரமணி அறிவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பு தலைவர் உட்பட 12 பேர் கைது: துணை ராணுவ படையினர் குவிப்பு; பதற்றம்
கமல் திமுகவை அழுக்கு மூட்டை கட்சி என்று விமர்சித்திருந்த நிலையில் கமலை கடுமையாக விமர்சித்து முரோயில் கட்டுரை வெளிவந்துள்ளது.
தி.மு.க. பற்றி கருத்து தெரிவித்த கமல், அழுக்கு மூட்டை கட்சி என்றும் அதனுடன் கூட்டணி இல்லை என்றும் கருத்து தெரிவித்து கூறியிருந்தார்.
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அழகிரி கூறும்போது, காங்கிரஸ் கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் மிகவும் நல்லது என்று தெரிவித்தார்.
கமல்ஹாசன் திமுகவை விமர்சித்திருந்த நிலையில் அழகிரியின் கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அழகிரி வெளியிட்டு இருந்த பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன். கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை. கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுகவை கமல் விமர்சித்தது கவனத்துக்கு வராததாலேயே அவரை கூட்டணிக்கு அழைத்தேன். திமுக மீதான கமலின் விமர்சனம் தேர்தல் நேரத்தில் பாஜகவிற்கு உதவும். எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி தலைமையிலான கூட்டணி தான் முடிவு செய்யும்.
திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி தான் முடிவு செய்யும். மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர்ப்பது குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும் என கூறினார்.
இதற்கிடையில் திமுகவின் நாளேடான முரசொலியில் கமலை விமர்சித்து கட்டுரை எழுதப்பட்டு உள்ளது. பூம் பூம் காரனின் மாடு என்ன் செய்து விடும் என்ற தலைப்பில் அந்த கட்டுரை எழுதப்பட்டு உள்ளது.
அதில், கமல்ஹாசனின் தோல் உரிய தொடங்கியுள்ளது.நரித்தனத்தில் பெயர்போன ரத்த வார்ப்பல்லவா அவர்! சினிமாவைப்போல் வேடங்களை மாற்றி வித்தை காட்ட துவங்கியுள்ளார். கலைஞருடன் நட்பு பாராட்டியபோதெல்லாம் ஊழல் கட்சியாக தெரியாத திமுக, ஆட்சியை இழந்து 7 ஆண்டுகள் கழித்துதான் ஊழல் கட்சியாக தெரிகிறதா? பாஜகவின் துப்பாக்கி அழுத்தத்தின் காரணமாக தன்னிலை மறந்து பிதற்ற தொடங்கியுள்ளார் கலைஞானி! என அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.