February 24, 2019 Sunday 10.35 AM
Newsletter Home

சற்றுமுன்

admin
Posted Date : Feb 11 2019 12:24 PM

உத்திரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்வு 

Posted Date : Feb 11 2019 12:24 PM

உத்திரகாண்டில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த பலரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

இந்நிலையில் பலி எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை உத்தரபிரதேச அரசு அமைத்துள்ளது. 

கள்ளச்சாராய விற்பனைக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் பலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Suggest a
correction
View
Comments
Post
Comments